பக்கம்:பொன் விலங்கு.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 529

"இந்தப்பையனை வேலைக்காக இன்டர்வ்யூ செய்யும்போதே பழைய நிர்வாகியிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொன்னேன். இவன் அரசியல் சம்பந்தம் உள்ளவனாக இருப்பானோ என்று சந்தேகமாக இருக்கிறது சார் இந்த மாதிரி ஆட்களை உள்ளே விட்டுவிட்டால் 'ஸ்டிரைக் எல்லாம் வந்து காலேஜ் குட்டிச்சுவராகி விடும்.மாணவர்கள் பாழாகிவிடுவார்கள் என்றுமுட்டிக்கொண்டேன். அவர் கேட்கவில்லை. இப்போது நான் கிடந்து அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது" என்று முதல்வர் வாய்க்கு வாய் பேசுகிறவர் களிடம் எல்லாம் சத்தியமூர்த்தியை அதிபயங்கரவாதியாக உருவாக்கிக்காட்ட முயன்று கொண்டிருந்தார். மற்ற மாணவர்கள் கல்லூரி வாயிலில் நின்று மறியல் செய்ததன் காரணமாகப் பெற்றோர்களுக்கும், முதல்வருக்கும், ஆசிரியர்களுக்கும் பயந்து வகுப்புகளுக்குப் போக நினைத்த சில மாணவர்கள் கூட வாயிற்பக்கத்திலேயே தடுக்கப்பட்டார்கள். மஞ்சள்பட்டியாரும், கல்லூரி முதல்வரும் நிலைமை மிகவும் கடுமையாவதை உணர்ந்து ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு மேல் கல்லூரி அலுவலக அறையில் நீண்டநேரம் கலந்துபேசி ஆலோசனைசெய்தார்கள். கடைசியில் ஏழு ஏழரை மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தியின் அறைக்குச் சொல்லியனுப்பி அவனை வரவழைத்தார்கள். சத்தியமூர்த்தியைப் பயமுறுத்திப்பார்த்தார்மஞ்சள்பட்டியார் ஏதோ ஆளடிமையாக வந்த வேலைக்காரர்களை மிரட்டுவது போல் அவனை மிரட்டினார்.

"என்னைக்கிருந்தாலும் உன்னை இந்தக் காலேஜிலிருந்து

சீட்டுக் கிழித்தால்தான் எங்களுக்கு நிம்மதி, நீ விவரந் தெரியாமே நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே, உன்னை உள்ளே தள்ளிக்

கம்பி எண்ண வைச்சுப்பிடுவேன்.தெரியுமா?"

'முடிந்தால் செய்ய வேண்டியதுதானே? அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதியார் பாடியிருக்கிறார்.

"இதெல்லாம் மேடையிலே பேசு, அப்ளாஸ் கொடுப்பாங்க, - பட்டம் வாங்கிட்டாப்பிலே ஆச்சா? மரியாதை-மண்ணாங்கட்டி ஒரு யழவும் தெரியறதில்லை...' -

பொ. வி - 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/531&oldid=595787" இலிருந்து மீள்விக்கப்பட்டது