பக்கம்:பொன் விலங்கு.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 - பொன் விலங்கு

- 'உங்களைப்போல யார் வேண்டுமானாலும் நிர்வாகியாக வந்துவிட முடியும்! ஆனால் என்னைப்போல் பதினைந்து ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்றவன்தான் ஓர் ஆசிரியராக வரலாம். இந்தத் தேசத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் புத்திசாலிகளான ஏழைகள் - முட்டாள்களாயிருக்கிற பசை உள்ளவர்களுக்குத் தலைவணங்க நேரிடுகிறது. நாங்கள் மிகவும் மலிவான விலைக்கு உங்களுக்கு கிடைத்து விடுகிறோம். என்ன செய்யலாம்?" - 'உனக்கு எத்தனை திமிர் இருந்தால் முதன் முதலா நான் நிர்வாகியாக வந்து ஒரு வாரத்துக்குள்ளேயே பையன்களை நீ இப்படிக் கலகம் பண்ணத் துண்டிவிட்டிருக்க முடியும்? இரு, இரு முதலில் உன்னைத் தொலைச்சிப்பிட்டு மறு வேலை பார்க்கிறேன்." என்று கறுவினார் மஞ்சள்பட்டியார். - -"

சத்தியமூர்த்தி மரியாதை தெரியாத அந்த மனிதனிடம் அதற்கு மேலும் நின்று பேசிக்கொண்டிருக்க விரும்பாமல் அங்கிருந்து தானாக வெளியேறிவிட்டான். அன்றிரவே ஹாஸ்டலின் ஒரு மூலையிலிருந்த பழைய் கூரை"ஷெட் ஒன்றுக்குத்தீவைக்கத் தாமே ஏற்பாடு செய்து அதை நன்றாக எரியவிட்டபின்-இரவு பதினொரு மணிக்குமேல் மாணவர்களில் சிலரை உடன் அழைத்துக் கொண்டு சத்தியமூர்த்தியே அங்கு வந்து அந்தக் கூரை ஷெட்டுக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகவும் அவர்கள் 'சத்தியமூர்த்திக்கு ஜே என்று கூவிக்கொண்டு நெருப்பு வைத்ததாகவும்-மல்லிகைப் பந்தல்-போலீசுக்குத் தந்திரமாக ரிப்போர்ட்செய்தார் மஞ்சள்பட்டியார்.இரண்டு சமையற்காரர்களும், ஓர் இரவுக் காவற்காரனும்...'சத்தியமூர்த்திக்கு ஜே!' என்று கூவியபடியே மாணவர்கள் இரவில் வந்து நெருப்பு வைத்ததைப் பார்த்ததாகவும் அப்போது சத்தியமூர்த்தியும் அவர்களோடு உடன் இருந்ததாகவும் சாட்சியங்கள் எழுதிக் கொடுத்திருந்தார்கள்.

தீ விபத்து என்ற வஞ்சக நாடகம் நடந்த தினத்தன்று விபத்து முடிந்த இரவுக்குப் பின் மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குப் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிளும் லேக் அவென்யூ"வில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடிக் கொண்டு வந்தபோது குமரப்பன்தான் அவர்களை முதலில் பார்த்து வரவேற்கநேர்ந்தது. சத்தியமூர்த்தி அப்போது குளியலறைக்குள் பல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/532&oldid=595788" இலிருந்து மீள்விக்கப்பட்டது