பக்கம்:பொன் விலங்கு.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 பொன் விலங்கு

கம்பி எண்ண வச்சுப்பிடுவேன். தெரியுமா?' என்று முன்தினம் ஜமீன்தார் தன்னைக் கூப்பிட்டு மிரட்டியிருந்ததை சத்தியமூர்த்தி நினைவு கூர்ந்தான். தம்முடைய பயமுறுத்தலை ஜமீன்தார் இப்போது இப்படி நிரூபித்து விட்டார் என்று அவனுக்குப் புரிந்தது. 'பணபலமும் அதிகார பலமும் நியாயத்துக்கு எதிராய் எப்படி வலுவாக எதிர்த்துக் கொண்டு வந்து நிற்கின்றன? என்பதை நினைத்தபோது அந்தக் கணத்தில் சத்தியமூர்த்திக்கு இந்த உலகத்தின் மேல் கோபம் வரவில்லை, சிரிப்புத்தான் வந்தது. திரைப்படங்களிலும், நாவல்களிலும்தான் கதாநாயகர்களுக்கு எதிராக அளவு மீறிக் கெடுதல் செய்கிற கொடியவர்கள் வருவார்கள் என்று அடிக்கடி வேடிக்கை யாகச் சொல்வான் குமரப்பன். வாழ்க்கையில் கண்ணெதிரிலேயே அப்படிப்பட்ட கொடியவர்கள் உண்டு என்பதை மஞ்சள்பட்டியார் இப்போது நிதரிசனமாகக் காண்பித்து விட்டார். - * .

குமரப்பன் அங்கு வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை அரஸ்ட் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அவசியமானால் குமரப்பன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் வந்து ஜாமீனில் சத்தியமூர்த்தியைத் திருப்பி அழைத்துக் கொண்டு போகலாமென்று அந்த இன்ஸ்பெக்டர் விரைவர்கப் பேச்சை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டார். போலீஸ்காரர்கள் புடைசூழ இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் விலங்கு மாட்டப்படாத கைதியாய்-ஆனால் அதே சமயத்தில் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும்-பல்லாயிரம் விலங்குகள் விழுந்து அழுத்தி உறுத்துவதைப் போன்ற கூச்சத்தோடு சத்தியமூர்த்தி படியிறங்கி நடந்து சென்றபோது மல்லிகைப் பந்தலின் அழகிய வீதிகள் பொழுது நன்றாக விடிந்திருந்தது. மனிதர்கள் நடமாடத் தொடங்கி யிருந்தார்கள். செய்யாத குற்றத்திற்காக அநியாயப் பழி சுமத்தப் பெற்றுப் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் தன் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்திவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்க மன விருப்பமில்லாமல் வெறுத்தாற்போல் தலைகுனிந்து சென்று கொண்டிருந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/534&oldid=595790" இலிருந்து மீள்விக்கப்பட்டது