பக்கம்:பொன் விலங்கு.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 533

சத்தியமூர்த்தி. ஜாமீன் கொடுத்துத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்காகப் பின்னால் சென்று கொண்டிருந்த குமரப்பனோடு ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும், அறையில் உடனிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூடச் சென்றார்கள். மல்லிகைப் பந்தலைப்போல் சிறிய நகரம் ஒன்றில் பலருக்கு அறிமுகமான கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைப் போலீஸ்காரர்கள் தெரு வழியே அழைத்துக்கொண்டு போனால் மக்கள் எவ்வாறு பரபரப்பாகக் கூடி நின்று கவனிப்பார்களோ அப்படிக் கவனிப்பதற்கு சத்திய மூர்த்தியும் அன்று பாத்திரமானான். இவ்வாறு போலீஸ்காரர்களால் அவன் தெரு வழியே அழைத்துக் கொண்டு போகப்படும் காட்சியைக் கண்டவர்களில் சில மாணவர்களும் இருந்தார்கள், மாணவிகளும் இருந்தார்கள். மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய ஊரில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்திலிருந்து காய்கறிக் கடை வாசலில் நடைபெறுகிற சிறிய பூசல் வரை எதுவுமே இரகசியமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக அந்த ஊரிலிருந்து தினசரிப் பத்திரிகைகள் எதுவும் பிரசுரித்து வெளியிடப்படுவதில்லை. தினப் பத்திரிகை இருந்திருந்தாலோ, விடுதிக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத்துண்டியதாகத்தமிழ் விரிவுரையாளர் கைது என்று சாயங்காலப் பதிப்பிலேயே கொட்டை எழுத்துக்களால் அச்சிட்டு முதற் பக்கத்தில் தலைப்பிலேயே வந்துவிடும். அத்தனை அவசரமாகச் செய்தி எங்கும் பரவிவிட்டது. சத்தியமூர்த்தியும் உடன் வந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷன் இருந்த சாலையை நெருங்கிவிட்ட சமயத்தில் அந்த நிலையில் அங்கே சந்திப்பதற்கு மனம் கூசக்கூடிய ஒருத்தியை சத்தியமூர்த்தி எதிர்பாராமல் அங்கே சந்தித்து விடும்படி நேர்ந்தது. மல்லிகைப் பந்தல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதற்காக கீழ் நோக்கி இறங்குகிற மலைச் சாலையும், சற்றே மேடான இடத்தில் உள்ள பூபதியின் பங்களாவுக்காக மேல்நோக்கி ஏறுகிற மலைச் சாலையும் வி என்ற ஆங்கில எழுத்தைச் சாய்த்து வைத்தாற்போல் அருகருகே இருந்ததனால் தந்தையை இழந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பின்பு வீட்டிலிருந்து காரில் எங்கோ புறப்பட்ட பாரதி-கீழ்ப்புறத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/535&oldid=595791" இலிருந்து மீள்விக்கப்பட்டது