பக்கம்:பொன் விலங்கு.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 535 நல்ல உறவு இல்லாமல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதும், விடுதி மாணவர்களும், பிறரும் சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்பதும் ஒருவாறு அவளுக்குத் தெரிந்திருந்த உண்மைகள்தான்.ஆனால் அந்த உண்மைகளின் விளைவு இவ்வளவு பயங்கரமாக மாறி சத்தியமூர்த்தியைப் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. கல்லூரி முதல்வருக்கும்-சத்தியமூர்த்திக்கும் அடிநாளிலிருந்தே நல்ல உறவு இல்லை என்பது அவளுக்குத் தெரியும். தன்தந்தை இருந்தவரை முதல்வருடைய இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் அவரேசத்தியமூர்த்தியை நேரடியாகக் கவனித்து அன்பாக நடந்து கொண்டதுபோல் மஞ்சள்பட்டி ஜமீன்தார் நடந்து கொள்ளமாட்டார் என்பதையும் தனக்குதானே அநுமானித்து, உணர்ந்துகொண்டிருந்தாள் பாரதி. மேற்பக்கத்துச் சாலையில் வேகமாகத் திரும்பிக் கீழிறங்கிக் கொண்டிருந்த கார் நின்றதையும்காரிலிருந்து அவள் வெளியே இறங்கிப் பரபரப்பாக தன்னைக் கவனித்ததையும் சத்தியமூர்த்தி கண்டிருந்தான். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கி விட்டதன்காரணமாகநின்று நிதானித்து அவளை நிமிர்ந்து பார்க்க நேரமும் விருப்பமும் இல்லாமல் போய்விட்டது அவனுக்கு. தன்னை அந்தக் கோலத்தில் அதே நிலையில் போலீஸ்காரர்கள் புடைசூழப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் பார்த்ததும் அவள் என்ன நினைத்துக்கொண்டு செல்வாள் என்று மனத்துக்குள் சிந்தித்துப் பார்க்கக்கூட் அப்போது, அவனுக்கு நேரமில்லை. போலீஸ்காரர்களும், சப்-இன்ஸ்பெக்டரும், அவனும், அவனோடு கூட வந்தவர்களும் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட்டார்கள். தெருவில் அங்கங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்குச் சொல்லி மற்ற மாணவர்கள் இன்னும் வேறு சில மாணவர்களுக்குச் சொல்ல-அதன் பயனாகப் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. வெகு நேரம் மேற்கொண்டு என்ன செய்வதென்று கையும் காலும் ஓடாமல் மேலே உள்ள சாலையில் காரருகே நின்றபடி போலீஸ் ஸ்டேஷன் வாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி. தன்னையறியாமலே அவளுக்குக் கண்கலங்கிவிட்டது. சத்தியமூர்த்தி தன்னிடம் பாராமுகமாக இருக்கிறான் என்றும்தன்னுடைய அன்பைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/537&oldid=847202" இலிருந்து மீள்விக்கப்பட்டது