பக்கம்:பொன் விலங்கு.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 பொன் விலங்கு

புரிந்து கொள்ளாமல் விலகி விலகிப் போகிறான் என்றும் அவனைப் பற்றி அவள் மனத்தாங்கலும் ஏக்கமும் கொண்டிருந்தாலும் இன்று அவனுக்குத் துன்பம் வந்துவிட்டதைப் பார்த்துக் கண்ணும் மனமும், கலங்காமல் அவளால் விலகிப் போய்விட முடியவில்லை. தந்தை இறந்தபின் பல நாட்களாக அவள் வீட்டிலிருந்து வெளியேறி எங்கும் போகவேயில்லை. இன்றோ உடல் நலனைப் பரிசோதித்துக் கொள்வதற்காக டாக்டர் வீட்டுக்குப் போகலாம் என்று புறப் பட்டிருந்தவள்-டாக்டர் வீட்டுக்குப் போகும் எண்ணத்தையே விட்டுவிட்டு யாராவது அந்தரங்கமானவர்களிடம் அந்த விடிகாலை வேளையில் சத்தியமூர்த்திக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதியையும் துன்பத்தையும் பற்றிக் குமுறிக் குமுறிப் பேசவேண்டுமென்று தோன்றியது. நல்ல வேளையாக, மாணவர்களுடைய விடுதியில் மட்டும்தான் வேலைநிறுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் உள்ள மாணவிகளின் விடுதியில் வேலை நிறுத்தம் எதுவும் கிடையாது. மாணவிகள் விடுதிக்கு உடனே போய் மகேசுவரி தங்கரத்தினத்தையோ, அவள் இல்லாவிட்டால் வேறு யாராவது ஒரு தோழியையோ தன்னுடைய காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று எல்லா விஷயங்களையும் மனம்விட்டுப் பேச வேண்டுமென்று தோன்றியது பாரதிக்கு. கல்லூரி மாணவர்களின் வேலைநிறுத்தத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி அதற்கு எந்தவிதத்தில் காரணம் என்பதைப் பற்றியும் கல்லூரி விடுதியிலேயே இருக்கிற ஒரு மாணவியிடம் விசாரித்து விடவேண்டுமென்று அப்போது அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் அன்பும் அநுதாபமும் கலந்து கனத்துக் கிடக்கும் உணர்வுச் சுமைகளை யாரிடமாவது பங்கிட்டுக் கொண்டாக வேண்டும் போலவும் தவிப்பாக இருந்தது அவளுக்கு - ; :

'காரை நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விடு' என்று ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டு டிரைவருக்குக் கட்டளையிட்டாள் பாரதி. கார் அங்கிருந்து நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விரைந்தது. கல்லூரிக் காம்பவுண்டைச் சுற்றிலும் சாலைகளிலும்-விடுதி முகப்பிலும், முதல்வர் அறையருகேயும் ஏராளமாக 'ஸ்பெஷல் மலபார் ரிஸர்ல் போலீஸ் காவல் காத்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களும், விளையாட்டு மைதானமும், புல்வெளிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/538&oldid=595793" இலிருந்து மீள்விக்கப்பட்டது