பக்கம்:பொன் விலங்கு.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாதி 537

வகுப்பறைகளும் களையிழந்து தெரிந்தன. அப்பா உயிருடன் இருந்திருந்தால் புகழ்பெற்ற இந்தக் கல்லூரியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு களங்கம் நேர விட்டிருக்க மாட்டார் என்று மனத்தில் நினைத்த போது பாரதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நியாயத்துக்கு எதிராகத் தன்னுடைய வலிமையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அப்பாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்து கல்லூரியின் பெயர் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது ஜமீன்தார் மாமாவிடமோ எல்லா முரட்டுக் குணங்களும் உண்டு. அதிகம் படிப்பில்லாதவர்களால் தங்களை இன்னொருவன் மதித்துப் பயப்பட வேண்டும் என்கிற ஆசையை ஒருபோதும் இழக்கவே முடியாது. தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகக்கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிற வரை சூதாட்டம் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது. ஜமீன்தார் மாமா சூதாட்டத்தில் ஆசை உள்ளவர். வாழ்க்கையையும் சூதாட்டத்தைப் போலவே ஆடப் பார்க்கிறார் அவர் என்று எண்ணினாள் பாரதி. மாணவிகளின் விடுதியைச் சுற்றியும்கூடப் பலமான போலீஸ் காவல் இருந்தது. கலைக்கூடமாகிய அந்தக் கல்லூரியின் அழகிய கட்டிடங்கள் இப்படிப் போலீஸ்காரர்களின் காவலோடு போர்க்களமாகக் காட்சி தருவதைக் கண்டு அதை நிறுவியவரின் மகள் என்ற உணர்வோடு மனம் வருந்திக் கண்கலங்கினாள் அவள். மகேசுவரி தங்கரத்தினத்தையும்-உடன் அழைத்துக் கொண்டு கல்லூரி விடுதியிலிருந்து பாரதி வீட்டுக்குத் திரும்பியபோது காலை எட்டு மணிக்குமேல் ஆகியிருந்தது. காரிலேயே இருவரும் பேசிக்கொண்டு வந்தார்கள். . . . . . . "நான் கேள்விப்பட்டவரை மாணவ மாணவிகள் எல்லாரும் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பாரதீ சத்தியமூர்த்தியை 'டிஸ்மிஸ் செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பு வதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பாலும், நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்து பழைய கூரை ஷெட்டுக்குத்தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு அவர்மேல் பழியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/539&oldid=595794" இலிருந்து மீள்விக்கப்பட்டது