பக்கம்:பொன் விலங்கு.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 பொன் விலங்கு

காதுகளாலும் கேட்டுக் கொண்டே காரைச் செலுத்திச் சென்றதாகப் பயந்து கொண்டே இப்போது அவளிடம் தெரிவித்து விட்டான் டிரைவர் முத்தையா.

"சத்தியமூர்த்தியை டிஸ்மிஸ் செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பாலும் நிர்வாகியும் ஹாஸ்டலி லிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டி விட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள்" என்று சிறிது நேரத்துக்கு முன் மகேசுவரிதங்கரத்தினம் கூறியபோது. அப்படியுமா செய்வார்கள்? என்று அதை நம்பத் தயங்கிய பாரதி இப்போது நம்பியே ஆக வேண்டியிருந்தது. டிரைவர் முத்தையா பொய் சொல்ல மாட்டான். நீண்ட காலமாகப் பூபதியின் குடும்பத்தில் ஒருவனாகக் கலந்து பழகிவிட்ட நம்பிக்கை வாய்ந்த தொழிலாளி அவன். அவனுடைய வார்த்தைகளையும் மகேசுவரி தங்கரத்தினம் கூறியவற்றையும் இணைத்துச் சிந்தித்து அப்படியே நம்பினாள் அவள், சத்தியமூர்த்தி அவளிடமிருந்து விலகியிருந்த காலத்திலும் அவளுடைய இதயத்தின் அந்தரங்கம் அவனைத் தன்னிடமிருந்து விலக்கி விடவில்லை.

"என்னுடைய கண்பார்வைக்கு எட்டிய மட்டும் ஆகாயத்தில் ஒரே ஒரு பிரகாசமான நட்சத்திரம்தான் தெரிகிறது; அந்த நட்சத்திரத்தையும் நீ மறைக்க முயலாதே மேகமே! அப்படியே நீ மறைத்தாலும் மறுபடிஅந்தஒளிமயமான என்இலட்சிய நட்சத்திரம் தெரிகிற வரை நான் அதைப் பார்க்கத் தவித்துக் கொண்டேயிருப்பேன் என்பதை நீ மறந்து விடாதே" என்று பொருள்பட நவநீத கவியின் உருக்கமான பாடல் ஒன்று உண்டு. சத்தியமூர்த்தி தன்னை விட்டு விலகிச் செல்ல முயன்ற காலத்திலும் இந்தப் பாட்டை நினைவுகூர்ந்து பாரதி நெகிழ்ந்து உள்ளுருகித். தவித்திருக்கிறாள். வெளிப்படையாக எல்லாப் பெண்களையும் போல் ஆற்றாமை, கோபம், போலி விரோதம் எல்லாவற்றையும் அவன் மேல் கொண்டுவிட்டாற்போல அவளும் அவனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/542&oldid=595798" இலிருந்து மீள்விக்கப்பட்டது