பக்கம்:பொன் விலங்கு.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 பொன் விலங்கு

'காரில் என்னை அங்கு அழைத்துக்கொண்டு வரும்போது நீயும்தான் பார்த்தாயே? மாணவர்கள் நூற்றுக் கணக்காகப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வருத்தம் தோய்ந்த முகங்களோடு வந்து கூடி நிற்கிற பரிதாபத்தை என்னவென்று சொல்வது? இத்தனை பேருடைய பிரியத்தையும் அநுதாபத்தையும் சம்பாதிக்க முடிந்த ஓர் ஆசிரியர் எப்படிக் கெட்டவராக இருக்க முடியும்டி பாரதி?"

"அவர் கெட்டவராயிருக்க வேண்டுமென்று கூட நாமாக ஏன் நினைக்க வேண்டும். அவருக்கு வேண்டாதவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவரைக் கெட்டவராக நிரூபித்துவிட முயல்கிறார்கள் என்று மட்டும் இதனால் புரிந்துகொள். வேண்டியவர்களுடைய குற்றங்களை மறைத்துவிட்டு ஒரேயடியாக மேடையில் புகழ்வதும்-வேண்டாதவர்களுடைய குணங்களை மறைத்துவிட்டு ஒரேயடி யாகத் தூற்றுவதும் அரசியலில்தான் உண்டு. மெல்ல மெல்லச் சமூக வாழ்விலும் அந்தச் சந்தர்ப்பு. நியாயம் வந்து சூழ்ந்துகொண்டு விடும் போலிருக்கிறது." اني:

இதைக் கூறிவிட்டுப் பாரதி மேலே ஒன்றும் பேசத் தோன்றாமல் பெருமூச்சு விட்டாள். அவளுக்கு ஆறுதலாக மகேசுவரி தங்கரத்தினம் இன்னும் சிறிதுநேரம் அங்கே உடனிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டுக் கல்லூரி விடுதிக்குத் திரும்பிச் சென்றாள். அவளும் போனபின் பாரதிக்கு அங்கு இருப்புக் கொள்ளவே பிடிக்கவில்லை. ஜமீன்தாரும்-அவருடன் கண்ணாயிரம் என்ற கொடியவனும் அந்த வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு என்னென்னவோ சூழ்ச்சிகளைப் புரிவதாகத் தோன்றியது அவளுக்கு. மகேசுவரி தங்கரத்தினத்தைக் காரில் கல்லூரி விடுதிக்குக் கொண்டு போய் விட்டுத் திரும்பிய டிரைவர் முத்தையா வீட்டு ஹாலில் தனியாக உட்கார்ந்து கண் கலங்கி அழுது கொண்டிருந்த அவளிடம் ஆறுதலாக ஒரு செய்தி சொன்னான்.

'பாரதி அம்மா! உங்களுக்கு ஒரு நல்ல சேதி. அவரை யாரோ சிநேகிதங்க ஜாமீன் கொடுத்துப் போலீஸ் ஸ்டேஷன்லேருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போயிட்டாங்க...பிரியம்னா படிக்கிற பையன்களுக்கு இப்படியும் ஒரு பிரியம் இருக்குமான்னு எனக்கு ஆச்சரியமாயிருக்குது அம்மா அவரு போலீஸ் ஸ்டேஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/544&oldid=595800" இலிருந்து மீள்விக்கப்பட்டது