பக்கம்:பொன் விலங்கு.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 பொன் விலங்கு

வெளிப்படையாக எதையும் சொல்லவும் முடியாமல், யார் மேலும் அநுதாபத்தைக் காண்பித்துக்கொள்ளவும் முடியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் தவித்தாள் அவள். ஜமீன்தாரோ அவள் மேல் அன்பையும் பாசத்தையும் அள்ளிப் பொழிவதாகப் பொய்யாய் நடித்துக் குழைந்தார்.

'வர வர நீ சரியாகச் சாப்பிடுகிறதில்லேன்னு சமையக்காரங்க ஒரேயடியாப் புகார் செய்யிறாங்க. இப்படி இளைச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? 'டாண்ணு பத்தரை மணியடிச்சா சாப்பாட்டு மேஜைக்கு வந்துடனும். நீ காலேஜ் போகத் தொடங்கினப்புறம் ஒன்பரை மணிக்குச் சாப்பாட்டை வைச்சுக்கலாம்..."

ஜமீன்தாருடைய இந்தப் பரிவான விசாரணைக்குப் பதில் ஒன்றுமே சொல்லாமல் உதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டே அவருக்குப் பின்னால் வெறுப்போடு நடந்த பாரதி சிறிது நேரம் கழித்து 'காலேஜிலே ஏதோ ஸ்டிரைக்காமே? ஊரெல்லாம் ஒரே புரளியாயிருக்கிறதே?..." என்று தைரியமாக அவருடைய மனத்தின் உள்ளெண்ணத்தை அறியும் நோக்குடன் பேச்சை ஆரம்பித்தாள். இந்தப் பேச்சை அவள் ஆரம்பித்தபோது இருவரும் உணவு மேஜைக்கு எதிரே போய்ச் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். கண்ணாயிரமும் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்திருந்தார். அவள் இப்படிக் கேட்டதும்-அந்தப் பேச்சை மேலே வளர்க்க விரும்பாமல் அப்படியே அசுவாரஸ்யமாக விட்டுவிட்டாற் போன்ற ஒருவகை மெளனம் ஜமீன்தார் பக்கம் நிலவியது, சமையற்காரர் பரிமாறத் தொடங்கியிருந்தார். சாப்பாட்டைத் தொடங்குமுன் திடீரென்று அப்போதுதான் நினைத்துக் கொண்டவர் போல், 'கண்ணாயிரம் மதுரைக்கு ஒரு 'அர்ஜென்ட் கால் புக் பண்ணு, கணக்குப்பிள்ளைபேரைச் சொல்லி நம்ம பங்களா. நம்பருக்குக் கூப்பிடு. என்றார் ஜமீன்தார். கண்ணாயிரம் உடனே எழுந்துபோய் அதே டைனிங் ஹாலில் ஒரு மூலையிலிருந்த டெலியோனில் மதுரைக்கு டிரங்கால் புக் பண்ணிவிட்டு வந்தார். அப்போது பாரதி தன்னைக் கேட்ட கேள்வியை மறந்தாற்போல விட்டுவிட்டு"தலையிலே இடிவிழுந்த மாதிரிப் பெரிய துக்கம் நடந்துபோச்சு. அப்பா போனதைத்தான் சொல்றேம்மா! உன் மனசுக்கும் இனிமே ஒரு ஆறுதல் வேணும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/546&oldid=595802" இலிருந்து மீள்விக்கப்பட்டது