பக்கம்:பொன் விலங்கு.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 545

இன்னிக்கோ நாளைக்கோ நம்ம கணக்குப் பிள்ளை மோகினியை மதுரை யிலேருந்து காரிலே இங்கே அழைச்சிட்டு வந்திடுவாரு நீ அவகிட்ட பரத நாட்டியம் கத்துக்க. உன் மனசுக்கும் ஒரு மாறுதல் வேணுமில்லே? அந்தப் பொண்ணுக்கு வீணைகூட நல்லாத் தெரியும். நீ அதையும் அவகிட்டவே படிச்சிக்கலாம்?' என்று சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ பேசத் தொடங்கினார் ஜமீன்தார். பாரதிக்கு இதைக்கேட்டு உள்ளுரக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அவள் மெளனமாயிருந்தாள். சாப்பாடு முடிவதற்குள்ளே டிரங்கால் கிடைத்து ஜமீன்தார் பேசி முடித்து விட்டார். மறுநாள் மாலை மோகினியும் கணக்குப் பிள்ளையும் காரில் வருவார்கள் என்றும் பேசிவிட்டு வந்து தெரிவித்தார்.

"ஒரு வாரம் வரை மோகினி இந்தப் பங்களாவிலேயே உன்னோடுதங்கியிருக்கட்டும் அப்புறம் பக்கத்து அவென்யூவிலுள்ள மஞ்சள்பட்டி ஜமீன் அரண்மனையிலே அவள் நிரந்தரமாகத் தங்க ஏற்பாடு செய்துக்கலாம். நான்கூட இனிமே அங்கேயே நம்ம அரண்மனையிலே குடியேறிவிட நினைத்திருக்கிறேன்" என்றார்.

சாப்பிட்டு முடித்தபின் ஹாலில் மூவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராதவிதமாகப் பிரின்ஸிபால் வந்து சேர்ந்தார். அவர் முகம் பேயறைபட்டாற்போல் வெளிறிப்போய் இருந்தது. கண்ணாயிரமும் ஜமீன்தாரும் பிரின்ஸிபாலை அழைத்துக் கொண்டு முன் பக்கத்து அறைக்குப் போனார்கள். பாரதிக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய ஆசையாயிருந்தது. ஆனால் அதை அவள் அறிந்து கொள்ள மூடியாமல் அவர்கள் முன் பக்கத்து அறையையும் கடந்து வெளியே தோட்டத்து மரத்தடியில் போய் பேசிக்கொண்டு நின்றார்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பின் ஜமீன்தார் மட்டும் உள்ளே திரும்பி வந்தார். கண்ணாயிரமும், பிரின்ஸிபாலும் காரில் அவசரமாக எங்கோ வெளியே கிளம்பிச் சென்றார்கள். ஏதோ சதித் திட்டத்துக்கு ஆலோசனை செய்கிறவர்போல் ஜமீன்தார் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தபோது, "காலேஜில் ஸ்டிரைக் ஆரம்பித்து ஒரு வாரத்துக்குமேல் ஆகும் போலிருக் கிறதே?' என்று இரண்டாவது தடவையாக அவரிடம் அந்தப் பேச்சைத் தொடங்கிப் பார்த்தாள் பாரதி. -

பொ. வி-35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/547&oldid=595803" இலிருந்து மீள்விக்கப்பட்டது