பக்கம்:பொன் விலங்கு.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 547

அகங்காரத்திலிருந்தான்வெறுப்புப் பிறக்கிறது.இவன்நம்மை மதிக்க மாட்டேனென்கிறானே என்னும் காழ்ப்பினால் அந்த வெறுப்பு வளர்கிறது. ஜமீன்தார் கல்லூரி முதல்வர் கண்ணாயிரம், எல்லாரும் சத்தியமூர்த்தியின் மேல் அளவற்ற வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாரதியும் உணர்ந்திருந்தாள். அந்த வெறுப்புக்கும் அவர்களுடைய சொந்த அகங்காரமே காரணமென்பது அவளுக்குப் புரிந்திருந்தது. உலகத்தின் சந்தோஷ மயமான விநாடிகள், சந்தர்ப்பங்கள் எல்லாம் அன்று காலையில் சத்தியமூர்த்தியைப் போலீஸ் நிலையத்தின் அருகே சந்தித்த வேளையோடு முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது அவளுக்கு அவள் வரையில் அப்படித் தோன்றியிருப்பதுதான் உண்மையாக நின்றது. அந்தத் துயரத்தை அவள் இப்போது மனப்பூர்வமாக அங்கீகரித்தேயாக வேண்டும்.

அகங்காரத்திலிருந்து பிறக்கிற வெறுப்புக்கு அவளும்தான் முன்பு ஆளாகியிருக்கிறாள். சத்தியமூர்த்தி தன்னிடம் அலட்சிய மாகவும், பாராமுகமாகவும் இருந்தபோது செல்வத்திலும், சீராட்டிலும் வளர்கிற எல்லாப் பெண்களுக்கும் இயற்கைக்குணமாக வந்து படிந்துவிடும் ஆள விரும்புகிற அன்பால் - அவளும் அவனை வெறுக்க முயன்று தோற்றிருக்கிறாள். ஆற்றாமையும், ஏமாற்றமும் அவள் இதயத்தில்கூட அகந்தையைப் புகையச் செய்திருக்கின்றன. அவன் தன்னை வெறுக்கிறானோ என்ற தாழ்வு மனப்பான்மை யால்தான் அவனை வெறுக்க முயன்று, அந்த முயற்சியே காதலாகப் பெருகித் தவிக்கிறாள் அவள் பற்றிப் படரத் தவித்த கொடியாக அவள் அலைந்தபோது அவன் கோபுரமாய் உயர்ந்து நின்றிருக்கிறான். துன்பமும், தோல்விகளும் பட்டுப்பட்டுத்தான் மனம் மென்மையடைந்து மலரவேண்டும். அந்த மலர்ச்சிக்குப் பின்போ பிறருக்கு விட்டுக் கொடுப்பதென்பது கடினமாகத் தோன்றுவதே இல்லை. துன்ப வயப்பட்டால்தான் இதயம் மெதுவாகும்; இளகும். தான் என்ற அகந்தையும் ஒழியும். தந்தையின் அகால மரணம் அவளைத் தனிமையோடும், துயரத்தோடும் நிறுத்திவிட்டது. அந்தப் பெரியதுயரத்தில் நடுவே வந்து மனத்தை மறைத்துக் கொண்டிருந்த சிறிய அகந்தை சென்றொழிந்து விட்டது. அவளுடைய மனத்தில் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/549&oldid=595805" இலிருந்து மீள்விக்கப்பட்டது