பக்கம்:பொன் விலங்கு.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 551

பேசுகிறாற் போன்ற பாவனையில் சொல்லிவிட்டு அவர் கண்ணாயிரத்தோடு வெளியே புறப்படஇருந்தார். ஆனால் அவர்கள் புறப்படுவதற்குள்ளேயே போர்டிகோவில் கார் வந்து நின்றுவிட்டது. ஜமீன்தாரின் மேலும் கண்ணாயிரத்தின் மேலும் தனக்கு அப்போது இருந்த கோபத்தினால் மோகினியின் மேல் அசிரத்தை காண்பிக்கவில்லை பாரதி. மோகினியின் இணையற்ற நாட்டியக் கலைத் திறமையில் அவளுக்குப் பக்தியும் மரியாதையும் எப்போதுமே உண்டு. -

கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டுக் கண்ணாயிரமும் ஜமீன்தாரும் முன் பக்கத்திற்கு விரைந்தார்கள். தயங்கித் தயங்கி அவர்களைப் பின்தொடர்ந்து பங்களாவின் முகப்புக்கு வந்தாள் பாரதி. வந்து நின்ற காரிலிருந்து கணக்குப் பிள்ளை முன்னால் இறங்கிப் பின்புறத்துக் கதவைத் திறந்து விட்டதும் கீழே இறங்கிய மோகினியைப் பார்த்துப் பாரதி அப்படியே திகைத்துப் போனாள். 'வாடிக் கருத்து இளைத்து இவள் ஏன் இப்படிச் சோக ஒவியமாக இறங்கி வருகிறாள்? என்று பாரதியின் மனம் அவளைப் பார்த்துக் கலங்கியது. . . - - காரின் அருகே வந்து நிற்கும் ஜமீன்தாரையும், கண்ணா யிரத்தையும் கவனிக்காதது போலவே அவள் நேரே தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் பாரதிக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது. ஜமீன்தாரையும், கண்ணாயிரத்தையும் அவர்கள் அங்கு வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டும், ஓரளவு அலட்சியமாகவும், வெறுப்புடனும், தான் பார்க்க விரும்பாதது போல் அவள் புறக்கணித்துவிட விரும்புவதாகத் தோன்றியது பாரதிக்கு 'ஏதோ நானும் இங்குவந்துசேர்ந்துவிட்டேன் என்று வேண்டாவெறுப்பாகச் சோர்ந்த பாவனையில்மோகினிகாரிலிருந்துஇறங்கிநடைப்பிணமாக நகர்ந்து வருவது போலவும், முன்நோக்கிக் கால் எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியையும் யோசித்துக்கொண்டே எடுத்து வைப்பது போலவும் தோன்றியது பாரதிக்கு, மோகினியின் அழகையும் எடுப்பான தோற்றத்தையும் பற்றிப் பாரதிக்கு அவளைச் சந்தித்த முதல்நாளிலிருந்து அந்தரங்கமாக ஒரு பொறாமை கூட உண்டு. எப்போதோ சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள்பட்டி ஜமீன்தாரோடும், கண்ணாயிரத்தோடும் அப்பா மதுரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/553&oldid=595810" இலிருந்து மீள்விக்கப்பட்டது