பக்கம்:பொன் விலங்கு.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 555

மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக்கொண்டு வந்திருக்கும் அந்தக் கணக்குப்பிள்ளையிடம் யாரைப் பற்றி எதற்காக ஜமீன்தார் இப்படி இரைந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் பாரதிக்குப் புரியவில்லை.

மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்துக்கொண்டு வரச்சொல்லி அந்தப் பேச்சியம்மன் படித்துறைக் கிழவனுக்கு டெலிபோன் செய்தபோது ஜமீன்தாருக்கும் கண்ணா யிரத்துக்கும் முன்பு தோன்றாத புது யோசனை ஒன்று இப்போது தோன்றியது. சத்தியமூர்த்தியின் தகப்பனான இந்தக் கிழவனைக் கொண்டே அவனை அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீன்தாருக்குத் திருவாய் மலர்ந்தருளினார். -

"அத்தனை திமிராயிருக்கிறவன் எங்கே ஐயா. தகப்பன் பேச்சுக்கு அடங்கப் போறான்?' என்று ஜமீன்தார் தயங்கினார்.

'முயன்று பார்ப்போம். தகப்பனும் மகனுமாகச் சேர்ந்து கையெழுத்துப்போட்டு வீடு கட்டறதுக்கு என்னிடம் நெறையக் கடன் வாங்கியிருக்காங்க...அதையும் நினைவுபடுத்திப் பயமுறுத்திப் பார்க்கலாம். கல்லை எறிஞ்சா அப்புறம் மாங்காயோ கல்லோ எதுவேனாத் திருப்பி விழுந்திட்டுப்போவுது...!" என்றார் கண்ணாயிரம். எனவே இரண்டு பேருமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையை நயமாகவும், பயமாகவும் மிரட்டிப் பார்த்தார்கள். பலவிதங்களில் அவர்களுக்குக் கட்டுப்பட்ட அந்த ஏழை மனிதர் தம் மகனுடைய பிடிவாத குணத்தை நன்றாக உணர்ந்திருந்தும், பணம் படைத்த அவர்களுடைய வற்புறுத்தலை மீற முடியாமல் 'அன்றே அவனைச் சந்தித்து ஜமீன்தாரிடமும் பிரின்ஸிபாலிடமும் மன்னிப்புக் கேட்கும்படி புத்தி சொல்லிப் பார்ப்பதாக ஒப்புக்கொண்டார். துணிந்து சத்தியமூர்த்தியைத் தீர்த்துக்கட்டிச் சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவது என்ற முயற்சியில் தானும் பிரின்ஸிபாலும் இறங்கியிருந்தாலும் மாணவர்களுடைய ஆதரவு சிறிதுகூட குறையாமல் அவன் பக்கம் இருப்பதைப் பார்த்து இப்போது ஜமீன்தாருக்குச் சிறிதளவு தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. அதனால் சத்தியமூர்த்தியே தன்னிடமும் பிரின்ஸி பாலிடமும் வந்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் பையன் களையும் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/557&oldid=595814" இலிருந்து மீள்விக்கப்பட்டது