பக்கம்:பொன் விலங்கு.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 561.

பிள்ளைக் கிழவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவர் யார்? இத்தனை வயதானவரை ஜமீன்தார் மாமா ஏன் இப்படி வேலைக்காரர்களை ஏவுவதுபோல் ஏவிச் சிரமப்படுத்தறாங்க?"

"எனக்கு எதுவுமே தெரியாதம்மா? மதுரையில் மஞ்சள்பட்டி பங்களாவில் கணக்குப் பிள்ளையாக இருக்கிறார்போல் இருக்கு. என்னிடம் அவர் அதிகம் பேசறதேயில்லை. மதுரையில் காரில் சாமான்களையும் என்னையும் ஏற்றிவிட்டு முன் nட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டவர். இங்கே வந்து சேருகிற வரையில் வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட என்னோடு பேசுவில்லை. யாரோ பாவம் அப்பாவி என்னைப் போலவே இந்தப் பாவிகளிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்கிறார்...' என்றாள் மோகினி. கண்ணாயிரத்தையும், ஜமீன்தாரையும் மோகினி உள்ளுர வெறுக்கிறாள் என்பதைப் பாரதி முன்பே குறிப்பாகப் புரிந்து கொண்டிருந்ததனால், இதைக் கேட்டு அவள் அதிகம் வியப்படைய வில்லை. இந்தப் புதிரைப் புரிந்து கொள்ள அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மீதமிருந்தது. டிரைவர் முத்தையாதான் காரை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். திரும்பிவந்ததும் அவனைத்தனியே கூப்பிட்டு விசாரித்தால் அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை அவர்கள் எங்கே அழைத்துக்கொண்டு போனார்கள்? என்ன செய்வதற்காக அழைத்துக்கொண்டு போனார்கள்? என்ற விவரமெல்லாம் தெரிந்துவிடும். கார் திரும்பி வருகிறவரை பொறுத்திருப்போம் என்று பொறுமையோடு இருந்தாள் அவள். அப்படியிருந்தபோது அதுவரை தானாக வலுவில் அதிகம் பேசாமல் இருந்த மோகினியே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள்.

'ஏனம்மா பாரதீ? உங்க அப்பாவுக்கு அப்புறம் இந்தக் காலேஜ் நிர்வாகத்தை எல்லாம் யார் கவனிக்கிறாங்க...? அவரைப் போலப் பெருந்தன்மையா இனிமேல் இன்னொருத்தர் கவனிக்க முடியுமா?” . . .

'இதென்ன் இப்படிக் கேட்கிறீர்கள் அக்கா? நீங்க நீயூஸ் பேப்பரே பார்க்கிறதில்லையா? அப்பாவுக்கு அப்புறம் ஜமீன்தார் மாமா காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவராக வந்திருக்கிறாரு. அதோடு காலேஜிலே ஸ்டிரைக்கும் வந்திருக்கு...எதுவுமே

பொ.வி. 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/563&oldid=595821" இலிருந்து மீள்விக்கப்பட்டது