பக்கம்:பொன் விலங்கு.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 - பொன் விலங்கு

உங்களுக்குத் தெரியாதா?' என்று பாரதி கூறிய செய்தியைக் கேட்டதும் மோகினிக்குத் திக்கென்றது. அவளுடைய உள்ளுணர்வு பயந்து நடுங்கியது. ‘என்னைக் காப்பாற்றிக் கைப்பற்றி ஆட்கொண்ட தெய்வம் விரிவுரையாளராக வேலை பார்க்கிற இந்தக் கல்லூரிக்கும் ஜமீன்தார் தலைவராக வந்து விட்டாரே! இனி என் அன்பருக்கு என்னென்ன கெடுதல்களெல்லாம் வருமோ? என்றெண்ணி மனம் கலங்கினாள் அவள். அவளை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்த கணக்குப்பிள்ளைக் கிழவரும் "டிரங்கால் வந்தது ஜமீன்தார் ஐயா உங்களைக் காரிலே மல்லிகைப் பந்தலுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. நாளைக் காலையிலே புறப்படனும்" என்று மட்டும்தான் கூறியிருந்தாரே ஒழியக் கல்லூரி நிர்வாகியாக ஜமீன்தார் வந்திருப்பதையோ, வேலைநிறுத்தம் பற்றியோ, மல்லிகைப் பந்தல் அரண்மனையிலேயே இனிமேல் குடியேறவேண்டுமென்பதைப் பற்றியோ ஒரு வார்த்தைகூடத் தெரிவிக்கவில்லை. "நிஜமாகவே உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா அக்கா?” என்று மறுபடியும் வியப்பு மேலிட்டு வினாவிய பாரதிக்கு மோகினி கூறிய பதிலில் ஆற்றாமையும் துயரமுமே நிறைந்திருந்தன.

“எனக்கென்னம்மா தெரிகிறது? மதுரையில் ஜெயில் கைதி மாதிரி அடைந்து கிடந்தேன், இனிமேல் இங்கே அடைந்து கிடக்கணும்..." -

'இந்த ஜமீன்தார் மாமா ரொம்ப மோசம் உங்களுக்குக் கூட அவர் இதெல்லாம் தெரிவிக்கிறதில்லையா?... வரட்டும் சொல்கிறேன்...' என்று பதில் சொல்லத் தொடங்கிய பாரதி, 'உங்களுக்குக்கூட என்ற வார்த்தையை ஏதோ ஒரு தொடர்பை நினைவூட்டுவது போன்ற அர்த்தத்துடன் பேசியதைக் கேட்டு மோகினி உள்ளுர மனம் கொதித்தாள். ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்தாள். மோகினி ஜமீன்தாரை வெறுத்தாலும் அவள், அவருடையவள்தான் என்று தவறாகப் புரிந்துகொண்டு பேசிவந்தாள் பாரதி. மோகினியோ அந்தப் பேச்சினால் மனம் புழுங்கிச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளேயே வெந்து துடித்தாள். அப்பப்பா ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/564&oldid=595822" இலிருந்து மீள்விக்கப்பட்டது