பக்கம்:பொன் விலங்கு.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sk அறியாமை அவ்வளவு இழிவு அன்று. அறிய மனம் இல்லாமைதான் மிக மிக இழிவு. -

来源

கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்

என்பதை யும், அதற்குக் காரணமாக இருந்தவர் அதே கல்லூரியில் வேலை பார்க்கும் ஓர் இளம் விரிவுரையாளர் என்பதையும் பாரதி கூறக்கேட்டதும் மோகினி தானாகவே மனதில் எதை எதையோ கற்பனை செய்து கொண்டு கலங்கினாள்.

"ஐயோ என் உயிரினும் மேலான தெய்வம் துன்பப்படுவதை நான் அருகில் இருந்தே காணும்படி விதி என்னையும் இங்கே கொண்டுவந்து தள்ளிவிட்டதே' என்று அப்படி இருக்குமோ? என்பதை அநுமானிக்கும் போதே மோகினி நடுங்கினாள். இந்த வேளையில் முன்புறம் போர்டிகோவில் மறுபடியும் கார் வந்து நிற்கும் ஓசையைக் கேட்டுப் பாரதி மோகினியோடு பேசிக் கொண்டிருந்த பேச்சை அப்படியே பாதியில் விட்டு விட்டு எழுந்து போய்ப் பார்த்தாள். காரில் ஜமீன்தாரும் கண்ணாயிரமும், புதிதாகப் பிரின்ஸிபாலும் திரும்பி வந்திருந்தார்கள். கணக்குப்பிள்ளைக் கிழவரை மட்டும் காணவில்லை. அவர்கள் போன இடத்தில் அந்தக் கிழவரை மட்டும் எங்கேயோ விட்டு விட்டுப் பிரின்ஸிபாலை அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. வந்தவர்கள் மூவரும் காரிலிருந்து கீழே இறங்கி உள்ளே முன் பக்கத்து அறைக்குள் நுழைந்தவுடன் தோட்டத்துப் பக்கமாகப் பின்புறம் வந்து தன்னைப் பார்க்குமாறு டிரைவர் முத்தையாவுக்கு ஜாடை காட்டினாள் பாரதி. வண்டியை ஷெட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு உடனே வருவதாக அவனும் பதிலுக்கு ஜாடைகாட்டிச் சென்றான். - - . r பின்புறம் தோட்டத்துவராந்தாவின் கிராதியைப் பிடித்தவாறே டிரைவர் முத்தையாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/566&oldid=595824" இலிருந்து மீள்விக்கப்பட்டது