பக்கம்:பொன் விலங்கு.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 567

"அந்தக் கிழவரை அழைத்துக்கொண்டு அவர்கள் வெளியே புறப்படும்போது சந்தேகமாக இருந்தது. அரைகுறையாகக் காதில் விழுந்ததிலிருந்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுதான் உன்னைக் கேட்கலாமென்று கூப்பிட்டேன் முத்தையா! நான் கேட்காமல் நீயே எல்லாம் சொல்லிவிட்டாய்."

"அப்புறம் வந்து பார்க்கிறேனம்மா ஒரு மணிக்கூறு சுழிச்சு மறுபடியும் போய் விட்ட இடத்திலேருந்து அந்தக் கிழவரை இங்கே அழைச்சிட்டு வரணுமின்னு ஜமீன்தார் ஐயாவோடஉத்தரவு..." என்று சொல்லிப் பாரதியிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான் டிரைவர் முத்தையா. உள்ளே மோகினி தனியாயிருந்தும், உள்ளே போய் அவளோடு எதிரே உட்காரத் தோன்றாமல், “சத்தியமூர்த்தியை அவருடைய தந்தை என்ன சொல்லி அடக்க முயல்வார்? அதற்கு அவர் எப்படி எப்படி மறுத்துக் கூறுவார்?' என்று அங்கேய்ே வராந்தாவிலிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கி விட்டாள் பாரதி. நியாயத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் தம்முடைய தகப்பனாரது வற்புறுத்தலுக்காக இணங்கிவிடுவார் என்று அவளால் கற்பனை செய்து பார்க்கவும்கூட முடியவில்லை.

அவள் இப்படி இங்கே தன் வீட்டில் உட்கார்ந்து வெறும் கற்பனையில் தந்தையும் மகனுமாகச் சந்திக்கும் அவர்களுடைய சந்திப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அங்கே லேக் அவென்யூவில் உள்ளே சத்திய மூர்த்தியின் அறையில் அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் கடுமையான விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

குமரப்பன் அவனுடைய கடையைக் கவனிப்பதற்காகக் கீழே இறங்கிப் போனபின் சத்தியமூர்த்தி பலவிதமான சிந்தனைகளுடன் மாடியறையின் வெளி வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தான். உலாவிக் கொண்டிருந்தவனுடைய பார்வை தற்செயலாகக் கீழ்ப்பக்கம் திரும்பியபோது சாலையில் ஏதோ ஒரு பெரிய கார் வந்து நின்றதையும் அதிலிருந்து தன் தந்தை இறங்கிப் படியேறுவதற்காக மாடியை நோக்கி வருவதைப் பார்த்து வியப்படைந்து, 'இவர் எப்போது மல்லிகைப்பந்தலுக்கு வந்தார்? எதற்காக வந்தார்? மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியோ, எனக்கும் கல்லூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/569&oldid=595827" இலிருந்து மீள்விக்கப்பட்டது