பக்கம்:பொன் விலங்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 55

வீட்டைவிட்டு ஊரைவிட்டு வெளியேறி வந்ததனால் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சினைகளும், வீட்டுக் கவலைகளும் மனத்தின் அடி மூலையில் முறிந்த முள்ளைப்போல் உடனடியாக வலியில்லாமல் தங்கிப் போயிருப்பதை அவன் உணர்ந்தான். எந்த விதமான செளகரியங்களும் இல்லாத மத்தியதரக் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு மூத்தவனாகப் பிறந்துவிடுகிற ஆண்பிள்ளை தன் பொறுப்புக்களையும் தான் வாழவேண்டிய வழியையும் வாழ்வில் மிகவிரைவில் தீர்மானம் செய்கிறவனாக இருக்க வேண்டும். பின்னால் யாரோ கன வேகமாகத் துரத்திக் கொண்டிருப்பதுபோல் ஒடிஓடி முயன்று வாழ வேண்டும் அவன். இப்படிப்பட்ட குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்து விடுகிறவனுக்கு ஒவ்வொரு நாளும் அவன் கைகளை எதிர்பார்த்து நிற்கிற பல தேவைகளும், வறுமைகளும் காத்திருக்கும். இதை எண்ணியபோதுதான் படித்திருந்த திருக்குறள் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது சத்தியமூர்த்திக்கு.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு?

வறுமையால் நாள் தவறாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிற ஒருவன் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் விடிகிற போது, "நேற்று என்னைக் கொன்று வாட்டினாற் போன்ற வறுமை இன்றும் வருமோ?" என்ற கவலையோடு விடிவதாகப் பாவித்துக் கேட்பதாய் இந்தக் குறளைப் பாடியிருக்கிறார் வள்ளுவர். நாளைக்குப் பொழுது விடிகிறபோது தன்னுடைய இதயத்திலும் இப்படி ஒரு கேள்வி பூதாகாரமாக எழும் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்துதான் இருந்தது. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றுவிட்ட ஒரு தந்தை தன் குடும்பத்துக்குத் தேவைகளையும், வறுமைகளையும் தவிர வேறு எதை அதிகமாகச் சேர்த்து வைத்திருக்க முடியும்? அத்தனை வறுமைக்கும் நடுவே சத்தியமூர்த்தி கல்லூரிப் படிப்புப் படித்து மீண்டதே அந்தக் குடும்பத்தின் மிகப் பெரிய சாதனைதான். பலருடைய உதவிகளும், கல்லூரியில் கிடைத்த 'ஸ்காலர்ஷிப் வசதிகளும்தான் அவன் தன்னுடைய கல்லூரிப் படிப்பை நடுவில் நிறுத்த நேரிடாமல் தொடர்ந்து கற்று முடிக்கத் துணையாயிருந்தன. மத்தியதரக் குடும்பத்துப் பெற்றோர் பலர் சாதாரணமாக எதிர்பார்ப்பதுபோல் அவன் பி.காம். படித்து சார்ட்டர்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/57&oldid=595828" இலிருந்து மீள்விக்கப்பட்டது