பக்கம்:பொன் விலங்கு.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 573

அப்போது தன் மனம் மேலும் அதிர்ந்து கலங்கும்படியான ஒரு நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தி அங்கு எதிர்கொள்ள நேர்ந்தது.

கடைவீதியிலிருந்த பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் ஜமீன்தாரைப்பின்தொடர்ந்து மோகினிகாரிலிருந்துகீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியின் தந்தையும் கண்ணாயிரமும்கூடஅவர்களோடு உடன்வந்திருந்தார்கள்.ஜமீன்தார் ஜவுளிக் கடையில் படியேறி உள்ளே நுழைந்துவிட்ட பின்பும்கூட மோகினி கார் அருகிலிருந்து நகராமல் கண்கலங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அப்படிப்பின்வாங்கித்தயங்கிநின்று கொண்டிருந்த வளைத் தன் தந்தை அருகிலிருந்து பயபக்தியோடு கடைக்குள் வருமாறு அழைப்பதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். ஜமீன்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரைக் காரிலே மதுரையிலேருந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு வந்தேன்' என்று பகலில் தன்னைச் சந்திக்க வந்திருக்கும்போது மதுரையிலிருந்து அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டது மோகினியைத்தான் என்பது இப்போது சத்தியமூர்த்திக்குப் புரிந்துவிட்டது. அவங்க பரம்பரை பரம்பரையா ஜமீன்தார். குடும்பத்துக்குப் பழக்கம். நீ அந்தப் பெண்ணைப் பார்க்கிறதோ பேசறதோ கொஞ்சம்கூட நல்லாயில்லே, வீணா ஜமீன்தாரோடகோபத்துக்கு ஆளாகாதே என்று மதுரையிலே தன்னை கண்டித்திருந்த தந்தை அதே மோகினியை ஜமீன்தாருடைய கட்டளையின்படி இப்போது மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்திருப்பதைத் தெரிவிக்கத் தயங்கி, யாரையோ அழைத்து வந்திருப்பதாகக் கூறியதை நினைத்து அவன் சிறிதும் வியப்படைய வில்லை. ஜமீன்தார் சொல்லித் தன் தந்தை மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்து வந்திருப்பதாக இப்போது அவனால் தெளிவாகவும் , பிரத்தியட்ச மாகவும் புரிந்துகொள்ள முடிந்தது. -

குமரப்பனோடு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி, பட்டு ஜவுளிக்கடை வாசலில் இந்தக் காட்சியைக் கண்டபோது நடையில் வேகம் குறைந்து தளர்ந்து நின்றுவிட்டான். குமரப்பனுக்கும் இந்த எதிர்பாராத சந்திப்பு ஆச்சரியத்தை அளித்தது. அவனும் அப்படியே திகைத்துப்போய் நண்பனுக்கு அருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/575&oldid=595834" இலிருந்து மீள்விக்கப்பட்டது