பக்கம்:பொன் விலங்கு.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 பொன் விலங்கு

சென்றவாறே சத்தியமூர்த்தி இப்படி மனம் வருந்தி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இதே வேளையில் பட்டுப்புடவைக் கடைக்குள் நுழைந்த மோகினி தூண்டிற் புழுவைப்போல் அங்கு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். ஜமீன்தாரோ அவள் மனத்தைக் கவர வேண்டுமென்பதற்காக கடைக்காரனிடம் சொல்லி விதம் விதமான பட்டுப் புடவைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தார். அவளுடைய மனமோ கடைக்குள் நுழைவதற்குமுன் சத்தியமூர்த்தியை அந்த வீதியில் சந்தித்த ஞாபகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. அப்போது ஒருகணம் சத்தியமூர்த்தியின் பார்வையும் தன் பக்கம் திரும்பிக் கவனித்ததும் அவளுக்கு தெரியும்.

தான் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும், கண்ணாயிரமும் உடன்வர ஜவுளிக்கடைக்குள் நுழைவதைப் பார்த்து அவர் என்ன நினைத்துக்கொண்டு போகிறாரோ?' என்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்கமுடியவில்லை. ஜமீன்தாரையும் கண்ணாயிரத்தையும் அவருக்குப் பிடிக்காது நான் இவர்களோடு எதற்காக மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்தேன்? எப்போது வந்தேன்! எப்படிவந்தேன்? என்றெல்லாம் சந்தேகப்பட்டு அவராகவே தம் மனத்தில் எதாவது கற்பனை செய்துகொண்டு என்மேல் ஆத்திரப்படப் போகிறாரே?' என்று எண்ணிப் பயந்தபோது, மோகினியின் அந்தப் பயத்தில், சத்தியமூர்த்தி தன்னைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாதே என்ற சுயநல்நோக்கமே இல்லை. ஓர் இந்துக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவி அடங்கி அஞ்சவேண்டிய நியாயமான அடக்கம்-பரம்பரைப் பரம்பரையாகப் பெண்குலத் திலேயே இது தன் எல்லை' என்று புரிந்து அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட அடக்கம்தான் அப்போது மோகினியின் பயமாகவும் இருந்தது. மாலையில் திடீரென்று இருந்தாற்போலிருந்து புடவைக் கடைக்குப் புறப்படவேண்டும் என்று கண்ணாயிரம் கூறியபோதே அவளுக்கு வெறுப்பாயிருந்தது. "அப்பா காலமாகி அதிக நாளாகவில்லை. நான் உங்களோடு புடவைக் கடைக்கு வந்தால் நன்றாகயிருக்காது அக்கா நீங்கள் மட்டும் போய்விட்டு வாருங்கள்" என்று சொல்லிப் பாரதி உடன்வர மறுத்துவிட்டாள். ஜமீன்தாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/580&oldid=595840" இலிருந்து மீள்விக்கப்பட்டது