பக்கம்:பொன் விலங்கு.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 579

கண்ணாயிரமும் போர்டிகோவில் காரைக் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு அவளையும் அழைத்து வருமாறு அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரை உள்ளே துரத்தியிருந்தார்கள். ஜமீன்தாருக்குப் பயந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்தபோதே உணர்ச்சி செத்துப்போய்க் கொலைக் களத்துக்குப் புறப்பட்டு வருவதுபோல் வந்து சேர்ந்திருந்தாள் அவள். அவளைப் புடவைக் கடைக்கு அழைத்துப் போய் ஊரார் மெச்சும்படி வாங்கிக் கொடுத்து மகிழச் செய்ய வேண்டுமென்று ஜமீன்தாருக்கு ஆசையாயிருந்தது. அந்த ஆசையை அவள் வெறுத்தாலும் வெளிப்படையாகத் துணிந்து மறுக்க முடியவில்லை. அநியாயமாக ஜமீன்தாருக்குக் கோபம் வந்து பிறர் முன்னிலையில் ஒரு பெரிய கலகமும் கூப்பாடும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவாவது அவள் அவரோடு கடைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

கடைவீதியில் சத்தியமூர்த்தியை ஒருகணம் பார்க்க நேர்ந்த போதோ அவளுடைய வேதனை இன்னும் அதிகமாகிவிட்டது. பார்த்த புடவைகளும் பிடிக்கவில்லை. மனத்துக்குப் பிடித்தவர் ஒரு கந்தல் துணியை வாங்கிக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொன்னாலும் அது சிறப்பாயிருக்கும். மனத்துக்குப் பிடிக்காதவர் வைரத்தால் இழைத்துப் பொன்னால் நெய்த பட்டுப்புடவைகளை மலையாக வாங்கிக் கொடுத்தாலும் எடுத்துக் கட்டிக் கொள்கிறபோது ஒவ்வொரு பட்டும் உடம்பிலே பாம்பாக நெளிவது போல் அருவருப்பாயிருக்கும். அவள் அங்கே பார்த்த பட்டுப் புடவைகளில் எதுவுமே தனக்குப் பிடித்ததாகச் சொல்லவில்லை. ஜமீன்தாரும் கண்ணாயிரமும் அவர்களுடைய இரசனைக்கெட்டிய வரையில் எந்தெந்த நிறத்திலோ பளிர் பளீரென்று மின்னும்படியான பட்டுப்புடவைகளைத் தேர்ந்தெடுத்து முடித்தார்கள். பில் வந்தது. இரண்டாயிற்று ஐந்நூறு ரூபாய்க்குமேல் ஜமீன்தாரிடமிருந்து பணம் செக்காகக் கடைக்காரர்கள் கைக்கு மாறியது. கடைக்காரர்கள், மூட்டை கட்டிக் கொடுத்த ஜவுளியைக் கணக்குப்பிள்ளைக் கிழவர் வாங்கிக் கொண்டு போய்க் காரில் வைத்தார். உயிரற்ற பொம்மையாய் இயங்கி நடந்துபோய் மோகினியும் காரில் உட்கார்ந்தாள். பக்கத்தில் ஜமீன்தாரும் உட்கார்ந்து கொண்டார். மோகினி ஜமீன்தார்மேல் பட்டுவிடாமல் விலகிக் கதவோரமாக ஒட்டினாற் போலக்காரின் மறுகோடியில் உட்கார்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/581&oldid=595841" இலிருந்து மீள்விக்கப்பட்டது