பக்கம்:பொன் விலங்கு.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 -- - பொன் விலங்கு

கொண்டாள். அவள் விலகி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து உள்ளுரக் கோபம் குமுறினாலும் வெளிப்படையாக அருகில் உட்காரச் சொல்லி மிரட்டுவதோ, கோபிப்பதோ சாத்தியமில்லையாதலால் ஜமீன்தார் சிரமப்பட்டுப் பொறுமையாயிருக்கும்படி ஆயிற்று. கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் முன் லீட்டில் ஏறிக்கொண்ட பின் கார் புறபட்டது. பூக்கடைவாசலில், "ஒரு நிமிஷம் காரை நிறுத்து" என்று சொல்லித் தாமே கீழே இறங்கிய ஜமீன்தார் ஒரு பெரிய பொட்டலம் பூவை வாங்கிக் கொண்டு வந்து மோகினியிடம் நீட்டினார். மோகினி இரண்டு விநாடிகள் தயங்கிவிட்டு அதை வேண்டா வெறுப்பாய் இடது கையால் வாங்கிக் காரில் வைத்தாள். முன்கோபக்காரரான ஜமீன்தார் தம்முடைய ஆத்திரத்தின் போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளேயே எரிமலையாக்க் குமுறிக் கொண்டிருந்தார். 'அவளுடைய பிரியத்தின் விலை என்னவாக இருக்கமுடியும்?' என்று புரிந்து கொள்ள இயலாமல் தவித்தது அந்த ஜமீன்தாரின் முரட்டு

இதயம்.

5–5

கொள்கையில்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப் போய் விடுகிறது. - - -

- :k 'வேகமாகப் போய்த் தொலையேன்! இதென்ன பெருமாள் கோயில் தேருன்னு நினைச்சுக்கிட்டியா? ஊர்வலம் போறியே?" என்று தம்முடைய கோபத்தைக் கார் டிரைவரின் மேல் திருப்பினார் ஜமீன்தார். அவருடைய அக்கினிக் கோபம் உள்ளுரக் கனன்று கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டு கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் வாயைத் திறந்து பேசுவதற்கே பயந்தவர்களாகக் காரில் மெளனமாக உட்கார்ந்திருந்தார்கள். கார், பங்களாவின் போர்டிகோவில் போய் நின்றதும்-ஜமீன்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/582&oldid=595842" இலிருந்து மீள்விக்கப்பட்டது