பக்கம்:பொன் விலங்கு.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 பொன் விலங்கு

அவர்தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்கும் மனத்தோடு இருந்தாள் அவள். அந்தக் கிழவரை சத்தியமூர்த்தியின் அறையிலிருந்து காரில் திரும்ப அழைத்துக்கொண்டு வந்துவிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டாவது தடவையாக டிரைவர் முத்தையா பாரதியைப் பார்க்கத் தோட்டத்துப் பக்கமாக வந்திருந்தான். அப்படிப் பார்க்க வந்திருந்தபோது, "பாரதி அம்மா சத்தியமூர்த்தி சாரோட அறையிலிருந்து இந்தக் கிழவர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு படியிறங்கி வந்ததைப் பார்த்தாக் காரியம் ஒண்ணும் பலிக்கலேன்னு தோணுதம்மா இவங்க சூழ்ச்சிக்குச்சத்தியமூர்த்தி சார் இணங்கியிருக்கமாட்டாரு..." என்று தெரிவித்துவிட்டுப் போனான். உடனே சிறிது நேரத்துக்குள் ஜமீன்தாரையும், கண்ணாயிரத்தையும், மோகினியையும், கணக்குப்பிள்ளைக் கிழவரையும் காரில் அழைத்துக் கொண்டு ஜவுளிக் கடைக்குப் புறப்பட்டு விட்டான் முத்தையா. அதனால் அவனைப் பாரதியால் அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேசிக்கொண்டிருக்க முடியாமல் போயிற்று. ஜமீன்தார், கண்ணாயிரம் முதலியவர்கள் மோகினியை அழைத்துக் கொண்டு ஜவுளிக் கடைக்குப் போயிருந்தபோது கல்லூரி முதல்வரிடமிருந்து டெலிபோன் வந்தது. வீட்டில் வேறுயாரும் இல்லாததால் பாரதியே டெலிபோனை எடுத்து முதல்வருக்குப் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. கல்லூரி மாணவர்களின் வேலைநிறுத்த நிலைமையை நேரில் கண்டறிந்து விசாரிப்பதற்காக மல்லிகைப் பந்தலுக்கு வந்து முகாம் செய்வதற்கிருந்த கலெக்டரையும்மாவட்டப் பெரிய போலீஸ் அதிகாரியையும் தம்முடைய ஜமீன் மாளிகையிலோ, பூபதியின் பங்களாவை ஒட்டி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸிலோ (விருந்தினர் விடுதி) தங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு. பிரமாதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தார் ஜமீன்தார். கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் அவர்கள் மல்லிகைப் பந்தலுக்கு வந்து இறங்கிய சூட்டோடு போய்ப் பார்த்து வரவேற்று மஞ்சள்பட்டி ஜமீன் மாளிகையிலும், விருந்தினர் விடுதியிலும் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஜமீன்தார் செய்திருப்பதாகவும், இரண்டு பேருடைய செளக்ரியங்களுக்காகவும் இரண்டு பெரிய கார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/584&oldid=595844" இலிருந்து மீள்விக்கப்பட்டது