பக்கம்:பொன் விலங்கு.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 583

டிரைவருடன் தனித்தனியே காத்திருப்பதாகவும் தெரிவித்து அழைத்துப் பார்த்திருக்கிறார் கல்லூரி முதல்வர். "ஜமீன்தாருடைய ஏற்பாடுகளுக்கு மிகுந்த நன்றி. ஆனால், நாங்கள் டிராவலர்ஸ் பங்களாவில் தங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எங்களுக்காக.நீங்கள்.இவ்வளவு சிரமப்பட்டிருக்கவேண்டாம்" என்று கலெக்டரும், டி.எஸ்.பி.யும் மறுத்து விட்டார்களாம். இந்த விவரத்தை ஜமீன்தார் வந்ததும் அவரிடம் தெரிவித்துவிட வேண்டுமென்று ஃபோனில் பாரதியிடம் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர். பாரதியும் ஜமீன்தார் வந்ததும் அவற்றை அப்படியே தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தாள். இப்போது ஜமீன்தார் கடைவீதியிலிருந்து திரும்பியிருந்தாலும் அவர் கோபமாக உள்ளே நுழைந்த கோலத்தைப் பார்த்து அவரிடம் போய்ப் பேசுவதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு கண்ணாயிரத்திடம் சொல்லி அவர் மூலம் ஜமீன்தாருக்குத் தெரிவிக்கலாம் என்றால் கண்ணாயிரமும் உள்ளே மோகினியிடம் ஏதோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். கண்ணாயிரத்தைக் கூப்பிட்டுக் கல்லூரி முதல்வர் டெலிபோன் செய்த விவரத்தைக்கூறலாம் என்று நினைத்த பாரதி உடனே அதைச்செய்யத் தோன்றாமல் ஜன்னலருகிலேயே தயங்கினாள். அடுத்த அறையில் கண்ணாயிரம் பட்டுப்புடவைப் பொட்டலத்தைப் பிரித்துப் பரப்பிக் கொண்டு மோகினியிடம் ஏதோ கத்துவதையும், மோகினி விசும்பி விசும்பி அழுவதையும் பார்த்துப் பரிதாபமாயிருந்தது அவளுக்கு. "இந்தப் பெண்ணை ஏன் இவர்கள் இப்படிப் பாட்ாய்ப் படுத்துகிறார்கள்?" என்று அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது.

"ஜவுளிக் கடையிலேயே நீ நடந்துகிட்ட தினுசைக் கண்டு ஜமீன்தாருக்கு ரொம்பக் கோபம் நீ நடத்துகிறது. கொஞ்சம்கூட நல்லாயில்லே மோகீ இப்பவாவது இதிலே உனக்குப் பிடிச்ச பொடவை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டு இந்தப் பூவைத் தலையிலே வச்சுக்க. முதல்லே வாடிப்போன பழம் பூவைத் தலையிலேருந்து எறி. முகம் கழுவிப் பொட்டு. வச்சிக்கிட்டு ஜமீன்தாரிட்டப் போயி ரெண்டு வார்த்தை சந்தோஷமாகப் பேசு.அவரு கோபம் தணியும்" என்று கண்ணாயிரம்.நயமாகவும் பயமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தார்.மோகினியோபாரதி பகலில் சூட்டிவிட்டு இப்போது வாடிப் போயிருந்த அதே பழம் பூவோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/585&oldid=595845" இலிருந்து மீள்விக்கப்பட்டது