பக்கம்:பொன் விலங்கு.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 பொன் விலங்கு இந்தக் கலெக்டரைச் செல்வாக்கைப் பயன்படுத்தியோ, உபசாரங்களைச் செலவழித்தோ ஒன்றும் நெகிழச் செய்துவிட முடியாது என்று பலர் சொல்லியிருந்தது நிஜமாகி விட்டதை அறிந்து, ஜமீன்தாரும் கண்ணாயிரமும், பிரின்ஸிபாலும் பயந்தனர். அடுத்த முயற்சியாக அன்றிரவு அவர்கள் மூவரும் தாங்களாகவே கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் சந்திப்பதற்காக டிராவலர்ஸ் பங்களாவுக்குப் போனார்கள். அப்போது அவர்களுக்கு அங்கே இன்னும் பெரியதோர் அதிர்ச்சி காத்திருந்தது. கலெக்டர் முகாம் செய்திருந்த அறையில் கலெக்டரோடு சத்திய மூர்த்தியும் குமரப்பனும் அமர்ந்து சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தனர்.

பக்கத்து அறையிலிருந்த கலெக்டரின் பி.ஏ.யை விசாரித்ததில், "இவங்க ரெண்டுபேரும் எங்க கலெக்டர் ஐ.ஏ.எஸ். எழுதிக் கலெக்டராக வருவதற்கு முன் காலேஜ் லெக்சரராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்களாம். அதனாலே கலெக்டர் ரொம்பப் பிரியமாகக் கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருக்காரு...' என்றார் அவர். ஜமீன்தாரும், கண்ணாயிரமும், பிரின்ஸிபாலும் கலெக்டரைச் சந்திப்பதற்காகச் சொல்லி அனுப்பினார்கள். "என்ன காரியமாகப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டு வரச் சொன்னார் சார்?" என்று உள்ளேபோன ஆள்திரும்பவும் வந்துவிசாரித்தபோது, ஜமீன்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் கோபம் தாங்க முடியவில்லை. 'முதன் மந்திரியிலிருந்து மாகாண கவர்னர் வரை ஒரு வார்த்தையில் கட்டுப்படக்கூடிய அத்தனை ஆற்றலுள்ள மஞ்சள்பட்டி ஜமீன்தாரிடமோ இந்த முந்தா நாள் கலெக்டர் வாலை ஆட்டுகிறான்? இவனை இந்த ஜில்லாவிலிருந்து மாற்றிவிட்டு மறுவேலை பார்க்கவேண்டியதுதான் என்று கண்ணாயிரம் மனத்துக்குள் கறுவிக்கொண்டார். ஜமீன்தாருக்கும் ஆத்திரம் பொங்கியது. கல்லூரி முதல்வரும் அதே மனநிலையில் இருந்தாலும் ஒரு சிறிய தாளை எடுத்து அதில்தாங்கள்பார்க்கவந்தகாரியத்தையும், வந்திருப்பவர்கள் பெயரையும் குறித்துக் கலெக்டருக்கு அனுப்பிவைத்தார். பத்து நிமிஷத்துக்கெல்லாம் கலெக்டரின் பி.ஏ. மறுபடியும் திரும்பி வந்து, "ஐ ஆம் வெரி சாரி சார் இந்தக் காரியமாக கலெக்டரே நாளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/588&oldid=595848" இலிருந்து மீள்விக்கப்பட்டது