பக்கம்:பொன் விலங்கு.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

k

ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டு விடுகிறாள். . . . .

ஒரிரு விநாடிகள் கல்லூரி முதல்வரின் முகத்தைக் கூர்ந்து கவனித்தபின் கலெக்டரே மேலும் தொடர்ந்து கூறலானார்: "சில வட இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் வேலை நிறுத்தத்தால் வகுப்புக் கலவரங்கள், அடிபிடி சண்டைகள், அரசியல் தலைவர்களின் தலையீடு எல்லாம்கூட வரும். நம்முடைய தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்கும் நீங்களே வலுவில் அப்படிக் கெட்ட பெயர் தேடாதீர்கள். இதுவரை நடந்தது போகட்டும். எல்லாவற்றையும் மன்னித்து விடலாம். இனிமேல் நாளையிலிருந்து ஒரு பொறுப்புள்ள பிரின்ஸிபாலாக இருந்து கல்லூரியை நடத்துங்கள். இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என மனத்தில் வைரம் வைத்துக் கொண்டு சமையல்காரர்களையோ, கல்லூரி நைட் வாட்ச் மேனையோ பழிவாங்காதீர்கள். இத்தனை நாட்களாக வகுப்புகள் நடைபெறாததால் மாணவர்களுக்கும் படிப்புக் கெட்டுப் போயிருக்கிறது. கல்லூரியின் நல்ல பெயரையும், சம்பந்தப் பட்டவர்களின் கெளரவத்தையும் உத்தேசித்துஎந்தமேல்நடவடிக்கையும்இல்லாமல் இந்தவிஷயங்களை நாங்கள் இப்படியே விட்டுவிடுகிறோம்" என்று கலெக்டர் பரிவோடு கூறியபோது, பிரின்ஸிபால் குனிந்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தார். பின்பு மாணவர்களுடைய பெருங்கூட்டத்தி னிடையேயும் ஒரு அரைமணி நேரத்துக்கு மேல் கலெக்டரும், டி.எஸ்.பி.யும் சொற் பொழிவாற்றினார்கள். பொறுப்புள்ள மாண்வர்கள்தாம் தேசத்தின் எதிர்கால நம்பிக்கை என்பதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/591&oldid=595852" இலிருந்து மீள்விக்கப்பட்டது