பக்கம்:பொன் விலங்கு.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 - - பொன் விலங்கு

முன்புறம் ஜமீன்தார் படுத்திருந்த அறையருகில் அவருக்கு உதவியாகக் காத்திருந்ததனால் பங்களாவின் உள்கூடத்தில் மோகினியும், பாரதியும் தனியாக அமர்ந்து பேசிக்கொள்ள வசதியாக இருந்தது. பாரதியின் மனத்திலோ அப்போது கல்லூரி வேலைநிறுத்தத்தைப் பற்றிய விசாரணையில் சத்தியமூர்த்திக்கு நியாயம் கிடைத்து அவர் வென்றுவிட்டார் என்ற பெருமிதமும் மகிழ்ச்சியுமே நிரம்பியிருந்தன, அந்த மகிழ்ச்சிப் பெருமிதத்தை இன்னும் யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் போலத் தனக்குத்தானே உணர்ந்தவளாக மோகினியிடம் பேச்சுக் கொடுத்தாள் பாரதி.

"அக்கா உங்களுக்குத் தெரியுமா செய்தி நான் சொன்னேனேஅதுதான்.மாணவர்களுக்கு எல்லாம் விருப்பமான ஓர் இளம் விரிவுரையாளரை வெளியேற்றிவிடுவதற்கு ஜமீன்தாரும் எங்கள் பிரின்ஸிபாலும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றேனே-அது பலிக்க வில்லை. அந்த நல்ல விரிவுரையாளருக்கு நியாயம் கிடைத்து விட்டது. இவர்கள் அவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை."

என்று தொடங்கிச் சொல்லிக்கொண்டு வந்த பாரதியைக் குறுக்கிட்டுத் தன் ஆவலை அடக்க முடியாமல் மோகினி ஒரு கேள்வி கேட்டாள்; - - - - -

'அது சரி, பாரதி; அந்த விரிவுரையாளரின் பெயர் என்னவென்று எனக்குச் சொல்லவில்லையே நீ"-இப்படி வினவியபோது வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவள் பதில் சொல்லப்போகும் பெயருக்காகக் காத்துத் தவிக்கத் தொடங்கியிருந்தாள் மோகினி.

"அவர்கூட உங்கள் ஊர்க்காரர்தான் அக்கா அவர் பெயர் சத்தியமூர்த்தி என்பார்கள். இன்னொரு விஷயம் கூட எனக்கே நேற்றுத்தான் தெரிந்தது. உங்களை மதுரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாரே, ஒரு கணக்குப் பிள்ளைக் கிழவர்அவர்தான் சத்தியமூர்த்தியுடைய தந்தையாம். அவரிடம் அந்தக் கிழவரையே அனுப்பியும் மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள். பலிக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே வந்த பாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/594&oldid=595855" இலிருந்து மீள்விக்கப்பட்டது