பக்கம்:பொன் விலங்கு.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி. 595

அவளுக்கு. மாலையில் பட்டுப்புடவைக் கடை வாசலில் என்னை ஜமீன்தாரோடும் கண்ணாயிரத்தோடும் சேர்த்துப் பார்த்தவர் என்ன நினைத்து எப்படி எண்ணி மனம் குமுறிக்கொண்டு போகிறாரோ? என்ற ஞாபகம் இப்போதும் அவளைக் கலக்கியது. நான் மதுரையிலிருந்து ஜமீன்தார் கூப்பிடுகிறாரே என்பதற்குப் பயந்து இங்கே வந்திருப்பதே அவருக்குப் பிடிக்காது கோழைகள் காதலிக்கக்கூடத் தகுதியற்றவர்கள் என்பாரே அவர் நானும்தான் ஏன் இப்படிச் செய்தேன்? எதற்காக இங்கே புறப்பட்டு வந்தேன்?

ஜமீன்தார் கூப்பிட்டால்தான் ஏன் பயப்படவேண்டும்? நான் வரமாட்டேன்' என்று பிடிவாதமாக மறுத்திருக்கலாமே! பாவி

அப்படிச்செய்யாமற் போனேனே' என்று எண்ணிக் கழிவிரக்கத்தில் ஆழ்ந்தாள் அவள். பாரதிசொல்வது உண்மையாயிருந்தால்தன்னை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தல் வரை காரில் அழைத்து

வந்தவர் வேறு யாரும் அந்நியர் இல்லை! தன் இதயம் கவர்ந்தவரின் தந்தை தான் என்ற மகிழ்ச்சியும் அந்தக் கழிவிரக்கத்தில் இருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் மலைக்கும்

மடுவுக்குமுள்ள அத்தனை வேறுபாடு இருப்பதை அவளும் நினைத்துப் புரிந்து கொண்டாள். என்ன ஆச்சரியம்! இந்தக்

கிழவன்தான் சத்தியமூர்த்தி அவர்களின் தந்தை என்பதை இதுவரை நான் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே' என்று நினைத்து அந்த நினைப்பின் சுவடு நீங்குவதற்குள்ளாகவே என்னுடைய மாமனார் என மெல்லத்தனக்குத்தானே கள்ளத்தனமாகச்சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் அந்தப் பேதை. கல்லூரியில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் தவிர்த்து நியாயம் பிறந்து விட்டது என்ற செய்தியைப் பாரதி கூறக் கேட்டபோது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 'பாரதியும் அதைப் பெருமகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னிடம் கூறினாளே! அவளுக்குத்தான் தன் விரிவுரையாளரிடம் எத்தனை

பெரு மதிப்பு . . . . . .

இந்தப் பாரதியைப் போல்தானே மல்லிகைப் பந்தல் கல்லூரியிலே படிக்கிற ஒவ்வொரு மாணவனும் மாணவியும் என் அன்பரின்மேல் பெருமதிப்பு வைத்திருப்பார்கள்? என்று எண்ணிப் பெருமைப்பட்டாள் மோகினி. பாரதி சத்தியமூர்த்தியைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/597&oldid=595858" இலிருந்து மீள்விக்கப்பட்டது