பக்கம்:பொன் விலங்கு.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 5 97

வேண்டுமாக்கும்? சரி!...உங்கள் விருப்பப்படியே சத்தியமாக நீங்கள் சொல்வதைச் செய்கிறேன்..சொல்லுங்கள்' என்று சிரித்துக் கொண்டே இணங்கினாள் பாரதி. - .

"நான் ஒன்று கொடுக்கிறேன். அதை நீதயவு செய்து எனக்காக அவரிடம் கொண்டு போய்க் கொடுத்து விட முடியுமா பாரதி?"

"அவரிடமென்றால் எவரிடம், அக்கா?" "அவர்தான்! நேற்றுப் பேசிக் கொண்டிருந்தோமே உங்கள் தமிழ் விரிவுரையாளர்." -

'யார்? சத்தியமூர்த்தி சாரிடமா?" "ஆமாம் அவரிடம்தான்." - இதைக் கூறும்போது மோகினியின் முகத்திலிருந்த நாணத்தையும், கணிவையும் கண்டு பாரதி திகைத்துப் போனாள். தன் உணர்ச்சிகளை எப்படி மறைத்துக்கொள்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. மோகினியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கவே தயக்கமாயிருந்தது பாரதிக்கு. சூறையாடப்பட்டது போன்ற மன நிலையில் எதிரே நிற்பவளுக்குப் பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கீழே குனிந்த தலையுடன் கால் கட்டைவிரலால் தரையை தேய்த்துக் கொண்டு நின்றாள் பாரதி. கோவென்று கதறி அழுதுவிடாமல் மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள் அவள். அவளுடைய நிலையையும் அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் தலை குனிந்து விட்டதையும் பார்த்துத் தான் கூறிய காரியத்தை அவளால் செய்ய முடியாதோ என்னவோ என்று தானாகவே அநுமானித்துக் கொண்ட மோகினி, 'ஏன்? என்ன? உன்னால் முடியாதென்றால்... வேண்டாம் பாரதி' என்று பதற்றத்தோடு கூறினாள். சில விநாடிகள் வரை மோகினியை நிமிர்ந்து பார்க்கத் துணிவின்றித் தலைகுனிந்து நின்றிருந்த பாரதி, பின்பு நிதானமாகவும் நிச்சயமான முகபாவத்துடனும் நிமிர்ந்து பார்த்தாள், 'அதெல்லாம் ஒன்றும் இல்லை என்னால் முடியும். நிச்சயமாக முடியும். ஆனால்...' என்று வார்த்தையை மெல்ல இழுத்து நிறுத்தித் தயங்கினாள்.

"ஆனால்... என்ன...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/599&oldid=595860" இலிருந்து மீள்விக்கப்பட்டது