பக்கம்:பொன் விலங்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாசகர்முன்னுரை

சமுதாயத்தில் நடைபெறும் அன்றன்றைய நிகழ்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் கதையை அழகுற இணைத்து எழுதி நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார்.ஆசிரியர்.

23-3–64

மு. அந்தாலன், கள்ளக்குறிச்சி. தெ.ஆ.

பொன்விலங்குக் கதையை ஒரு கற்பனை என்றே என்னால் எண்ண முடியவில்லை. கதைகள் காலப்போக்கில் மறையும் தன்மையன. ஆனால் பொன்விலங்கு காவியங்களைப் போல் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் காலப் போராட்டத்தை எதிர்நீச்சலிட்டு நிற்கும்.

21–3–64

வெ. சீனிவாசன், கொச்சி-4

கதையில் அவர் சிருஷ்டித்துள்ள மோகினி, சத்தியமூர்த்தி கதாபாத்திரங்கள் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள்.

30–3–64

எஸ். சீனிச்சாமி, சங்கனாச்சேரி.

இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன்விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும்,வாழ்வில்அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக்காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டவிருக்கும் தைரியமும் - வெறும் புரட்சியல்ல.இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியக்கனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும்சேவை செய்துவிட்டார் என்பதில் ஐயமில்லை. திரு.மணிவண்ணன் அவர்களுக்கு, இது ஒரு முழு வெற்றி.

16–4–64

கிருஷ்ணமூர்த்தி, லீட்ஸ்-6.இங்கிலாந்து

உண்மை.குறிக்கோள்,ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் இறுதிவரை போராடிய சத்தியமூர்த்தியின் பாத்திரம் உள்ளத்தில் அழியா ஒவியம். சமுதாயத்திற்கு இத்தகைய மக்களே தேவை. எழுத்தாணியின் வன்மை உலகறிந்ததொன்று. எனவே சமுதாயத்தினைத் திருத்த இது போன்ற கதைகளே விரும்பப்படுகின்றன.

சத்தியமூர்த்தியின் பாத்திரத்தைப்பற்றி நான் எண்ணும் பொழுதெல்லாம் Dr.A.J. Gronin LapLáš The Keys of The Kingdom' என்னும் நுாலில் வரும் பிரான்ஸிஸ் சிஷோமைத்தான் (Francis Chisholm) நினைவு கூர்கின்றேன்.

வே.பா. சந்திரன். பி.எஸ்ஸி.ஹைதராபாத்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/6&oldid=1357788" இலிருந்து மீள்விக்கப்பட்டது