பக்கம்:பொன் விலங்கு.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 பொன் விலங்கு

'கல்லூரியில் வைத்து அவரை நான் சந்தித்துப் பேச முடியுமென்று தோன்றவில்லை. அக்கா லேக் அவென்யூ" விலுள்ள அவருடைய அறையில் போய் அவர் கல்லூரிக்குப் புறப்படுவதற்கு முன்பே வேண்டுமானால் அவரைப் பார்த்துவிட முடியும்."

"எங்கே பார்த்தாலும் பரவாயில்லை! உன்னை என் கூடப் பிறந்த தங்கையாகப் பாவித்துக் கொண்டு நம்பி இதைக் கொடுத்தனுப்பு கிறேன் பாரதீ" என்று கூறிக்கொண்டே மோகினி கொடுத்த கடித உறையைக் கை நீட்டி வாங்கியபோது பாரதியின் கை நடுங்கியது. மனமோ கைகளை விட அதிகமாக உள்ளே நடுங்கிக் கொண்டிருந்தது. அதைத் தானே தன் கைகளால் நேரில் கொண்டு போய்ச் சத்தியமூர்த்தியிடம் கொடுக்கப்போகிற காட்சியைக் கற்பனை செய்தபோது தலை சுற்றிக் கொண்டு கீழே தள்ளிவிடுவது போல் உலகமே சுழல்வதாகத் தோன்றியது அவளுக்கு. தன் உணர்ச்சிகள் மோகினிக்கு முன்பாகவே குமுறி வெளிப்பட்டு விடாமல் அவள் மிகவும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

"மோகினி கொடுத்தனுப்பினாள் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு வா பாரதி நீ கல்லூரி விட்டுத் திரும்பிய பின் சாயங்காலம் உனக்குநானே எல்லாம் விவரமாகச்சொல்கிறேனம்மா!' என்று எதிரேநிற்பவளின் மனக்குமுறல் புரியாமல் நாணமும் சிரிப்பும் பொங்கிடப் பேதையாக ஏதோ சொல்லத் தொடங்கினாள் மோகினி, அதைக் கேட்ட பாரதியோ செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட முக மலர்ச்சியோடு ஏதோ ஒப்புக்குச் சிரிக்க முயன்றாள். பாவம்:

57.

米 பார்க்கப் போனால் இன்னொரு வருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும். sk

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/600&oldid=595863" இலிருந்து மீள்விக்கப்பட்டது