பக்கம்:பொன் விலங்கு.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - " . 599

தனக்குள்ளே பொங்கிக் கொண்டிருக்கிற துயரத்தையும் ஏமாற்றத் தையும் மோகினி தெரிந்து கொண்டு விட முடியாமல் மிகவும் சாமர்த்தியமாக நடித்துவிட்டாள் பாரதி. இன்னொருவருக்கு முன்னால் எதையும் நடித்து ஏமாற்றிவிட முடிகிறது. ஆனால் அதே காரியத்தைத் தன்னுடைய மன்ச்சாட்சிக்கு முன்னால் தானே நடிக்கவும் முடிவதில்லை; ஏமாற்றவும் முடிவதில்லை. சில வேதனை நிறைந்த வேளைகளில் தன்னை ஏமாற்றிக் கொள்ளவும் முடிந்தால்கூட நன்றாயிருக்கும்போல் தோன்றியது பாரதிக்கு. தன்னுடைய மகிழ்ச்சியின் மறுபுறமே பாரதியின் மெளனத்துக்கும் கலக்கத்துக்கும் காரணம் என்ப்தை மோகினியாலும் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. பார்க்கப்போனால், இன்னொரு வருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும். கல்லூரி நிர்வாகியும் முதல்வரும் சத்தியமூர்த்திக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிகளும், கெடுதல்களும் தோற்று, நியாயமும் வெற்றியும் அவர் பக்கமே கிடைத்துவிட்ட முதல் தினத்தைக் கொண்டாடி மகிழும் எண்ணத்துடன்தான் பாரதி அன்றிலிருந்து கல்லூரி வகுப்புகளுக்குப் போகத் தொடங்குவதென்று தீர்மானித்திருந்தாள். அந்தத் தீர்மானத்தில் என்னவோ இப்போதுகூட மாறுதல் இல்லை. ஆனால் அந்தத் தீர்மானத்துக்குக் காரணமாயிருந்த உற்சாகம் மட்டும் தளர்ந்து நலிந்து குன்றிப் போயிருந்தது. தான் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவள் கொண்டு போகிறாள் என்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு மோகினி வந்து முன்புறம் வழியனுப்புகிற பாவனையில் உடன்நிற்க, மனத்தின் துயரத்தை மறைத்துக் காட்டும் பொய்ச் சிரிப்போடு காரில் ஏறி அமர்ந்தாள் பாரதி. தந்தையைப் பறிகொடுத்த துயரம் ஆறி ஒரு வழியாகச் சின்னமா இன்றிலிருந்து காலேஜுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க என்ற உற்சாகத்தோடு காரை ஸ்டார்ட் செய்த முத்தையா, கார்காம்பவுண்டைக் கடந்து சிறிது தொலைவு சென்றதும் பின் nட்டிலிருந்து மெல்ல விசும்பி அழுகிற ஒலியைக் கேட்டுத் திகைத்தான்.

"என்னம்மா இது? அசட்டுப் பொண்ணு போல... எதுக்காவ இப்படி அழுவுரே? அப்பாநெனப்பு வந்திரிச்சுப் போலேருக்கு...நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/601&oldid=595864" இலிருந்து மீள்விக்கப்பட்டது