பக்கம்:பொன் விலங்கு.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 பொன் விலங்கு

'கடிதத்தைப் பற்றி இப்போ என்ன வந்ததம்மா? நீ இன்றைக்குக் காலேஜுக்குப் போகாமலிருந்திருந்தாலும் பரவாயில்லையே?... போய் இப்படி உடம்புக்கு இழுத்து விட்டுக்கொண்டு வந்திருக்கிறாயே..." என்று ஆறுதலாகக் கூறியபடி பாரதியைத் தழுவினாற்போல் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத்தாள் மோகினி.

"உடம்புக்குச் சரியில்லை என்றால் பச்சைக் குழந்தை மாதிரி இப்படியா அழுவாய் பெண்ணே?' என்று மோகினி சிரித்துக் கொண்டே வினவியபோது, பாரதி பதிலுக்குச் சிரிக்க முயன்று முடியாமல் ஏதோ நடித்தாள். மாலை வரை பாரதியிடம் ஒன்றும் பேச்சுக் கொடுக்காமல் அவளை நிம்மதியாய்த் தூங்கும்படி கூறித் தனியே விட்டுவிட்டுப் போயிருந்த மோகினி மாலையில் திரும்பி வந்து அவள்படுத்திருந்த அறையில் பார்த்தபோது அவள்துங்கவே இல்லை என்று தெரிந்தது. 'அசடு எதற்காக அழுகிறாய் இப்படி? காலேஜுக்குப் போன உடனே உனக்கு அப்பாவின் நினைவு வந்துவிட்டதா? பாவம்..." என்று கேட்டுக் கொண்டேடெம்பரேச்சர் பார்த்த மோகினி பாரதிக்கு நிஜமாகவே ஜூரம் வந்திருப்பதைப் புரிந்து கொண்டு பரபரப்படைந்து பதறினாள்.

58

பலரிடம் வாழ்க்கையின் அந்தரங் கங் ளைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாம லிருக்கவும் முடியாது.

  • Sk பாரதியின் ஜூரம் ஜன்னிகண்டு பிதற்றுகிற எல்லைவரை வளர்வதும், குறைவதுமாகப் பத்துப் பதினைந்து நாட்கள் அவளை வாட்டி எடுத்துவிட்டது. தாய் தன் அருமை மகளைக் கவனிப்பது போலவும் அன்புத் தமக்கை தன் பிரியமுள்ள தங்கையைப் பேணி உபசரிப்பதுபோலவும் பாரதி உடல்நலமின்றிப்படுக்கையில் கிடந்த நாட்களில் இரவு பகலாகத் தூக்கம் விழித்து ஒடியாடி அவளுக்குப்

廖/品 "ী ప్రిన్లే"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/610&oldid=595874" இலிருந்து மீள்விக்கப்பட்டது