பக்கம்:பொன் விலங்கு.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 பொன் விலங்கு

பாரதியின் குரல் குறுக்கிட்டு அந்த வேளையில் அவள் கற்பனைகளைத் தடை செய்திராவிட்டால் அவள் கனவுலகுக்கே போயிருப்பாள்.

'அக்கா இந்தப் பாட்டை நீங்கள் படித்திருக்கிறீர்களா? எத்தனை சோகமாகப் பாடியிருக்கிறார் பாருங்கள்? காதலில் தோல்வியடைந்தவர்களின் நினைவைச் சித்திரிப்பதாக இந்தப் பாட்டை நவநீத கவி பாடியிருக்கிறார் சத்தியமூர்த்தி சாருடைய தமிழ் வகுப்புச் சொற்பொழிவுகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தவை, இந்தக் கவிஞரின் உணர்ச்சி மயமான பாடல்கள் தான் இதோ இந்தப் பாட்டைக் கொஞ்சம் பாருங்களேன், சொல்கிறேன்" என்று பக்கத்து ஸ்டூலில் மருந்து பாட்டில்களோடும் அவுன்ஸ் கிளாஸோடும் நடுவே கிடந்த கவிதைத் தொகுதி ஒன்றை எடுத்து அடையாளமாக அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து மோகினியிடம் நீட்டினாள் பாரதி. மோகினி அந்தப் பாடலை வாய்விட்டுப் பாடினாள். -

முன்னும் பின்னும் நினைவாகி-அது

முடிவிற் பெரிய கனவாகி நீயும் நானும் கதையாகி நம்

கதையும் உலகிற் செலவாகிக் காலப் படுகை யதன்மேலே-முன்

கழிந்த நினைவுகள் கண்ணயர அழிந்த நினைவுகள் கண்கலங்க

அங்கும் இங்கும் அலைபாயும்... -- - - -- ...இந்தப் பாடலை மோகினி தன்னுடைய இனிய குரலில் ஓரளவு நன்றாகவே பாடி முடித்தவுடன் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பாரதிக்கு அழுகை குமுறி வெடித்துக் கொண்டு வந்து விட்டது. * . . . . .

"பாட்டு ரொம்பவும் உருக்கமாகத்தான் இருக்கிறது; அதற்காக நீ ஏன் இப்படி அழுகிறாய் பெண்ணே? சில பேருக்குச் சினிமாப்படத்தில் துன்பப்படுகிற காட்சிகளைப் பார்த்தால்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/618&oldid=595882" இலிருந்து மீள்விக்கப்பட்டது