பக்கம்:பொன் விலங்கு.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 பொன் விலங்கு

'மோகீ! உடம்பு இன்னிக்குக் கொஞ்சம் தேவலை! உன் கையாலே காப்பி கலந்து கொண்டாயேன்...' என்று ஜமீன்தார் அப்போது வேண்டிக் கொண்டதை மறுக்கவும் முடியாமல் விரும்பி அங்கீகரிக்கவும் முடியாமல் மனப் போராட்டத்தோடு உள்ளே சென்ற மோகினி கடனே என்று வெறுப்போடு ட்ரேயில் காப்பியை எடுத்து வந்து சாய்வு நாற்காலியருகே சென்று ஜமீன்தாரிடம் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு ஜமீன்தார்.அவளைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிக்கவும் அதே வேளையில் நேர் எதிரே வாயிற்புறமிருந்து சத்தியமூர்த்தி உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. -

நிமிர்ந்து பார்த்த மோகினி எதிரே வந்து நின்ற சத்தியமூர்த்தி தான் ஜமீன்தாருக்கு உபசாரம் செய்து பணிவிடை புரிவதாக எண்ணிக் கொண்டு முகத்தைச் சுளித்து எரித்துவிடுவதுபோல் தன்னை நோக்குவதைக் கண்டு மனம் பதறி நடுங்கினாள். சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்து வருவதைப் பார்க்க இயலாத நிலையில் ஜமீன்தார் பக்கவாட்டில் நோக்கியபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார். ஆனால் அந்த வேளையில் ஜமீன்தாரையும் அவளையும் அங்கே சேர்த்துப் பார்க்க முடிந்த சத்தியமூர்த்தி அவளை எப்படி எப்படியோ தவறாகப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பம் சதிசெய்து விட்டது.

- 59)

  1. -

g2 ({5 வேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்க தேவர்களாயிருப்பார்களோ

என்னவோ? . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/620&oldid=595885" இலிருந்து மீள்விக்கப்பட்டது