பக்கம்:பொன் விலங்கு.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 621

வார்த்தை எழாமல் தளர்ந்து போய்விட்டநாவுடன் காப்பியை அவள் நீட்டிய போது, "இந்த உபசாரம் எல்லாம் நீங்கள் ஜமீன்தாருக்குச் செய்தால் போதும். நான் இங்கு என்னுடைய மாணவியைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் வந்தேன். உங்கள் கையால் காப்பி குடிக்க இங்கே வரவில்லை...' என்று ஆத்திரத்தோடு வெட்டினாற் போலப் பதில் சொல்லிவிட்டுத் திரும்பிப்பாராமல் நடந்தான் அவன். இதைக் கேட்டதும் மோகினியின் கையிலிருந்த காப்பிடவராகீழேநழுவியது. பாரதிக்கோ ஒன்றுமே புரியவில்லை. சத்தியமூர்த்தி சாருக்கு இவ்வளவு கோபம் வந்து அவள் பார்த்ததே இல்லை. புயலைப்போல் வந்தேன். மின்னலைப்போல் மறைந்து விட்டேன் என்று ஷோரப் அண்ட் ரஸ்டம் காவியத்தில் படித்திருப்பதை யொப்ப சத்தியமூர்த்தி வேகமாக வந்தார்; ஆத்திரமாகத் திரும்பிப் போய்விட்டார் என்று எண்ணியபோது அவளுக்கும் அழுகைதான் வந்தது.

சத்தியமூர்த்தி சாரை வரச்சொல்லி தோழியின் மூலமாக ஏற்பாடு செய்தபோது அவர் தன்னிடம் மட்டுமே கோபமாகவும், ஆத்திரமாகவும் நடந்து கொள்வாரென்றும் மோகினியைப் பார்த்ததும், அவருடைய ஆத்திரம், கோபம் எல்லாம் பறந்துபோய், முகத்தில் புன்முறுவல் மலரும் என்றும் கற்பனை செய்து வைத்திருந்த பாரதி அந்தக் கற்பனைக்கு நேர்மாறாகத் தன்னிடம் அவர் பரிவாக நடந்து கொண்டு விசாரித்துவிட்டுப் போனதையும், அதேவேளையில் மோகினியைக் கடுமையாக வெறுத்து அவளைப் பார்க்கவ்ே பிடிக்காதவரைப்போல் முகத்தை முறித்துக்கொண்டு போய்விட்டதையும் நினைத்துக் காரணம் ஒன்றும் விளங்காமல் மனம் திகைத்துக் கலங்கினாள். - - - - - - -

என்ன அக்கா? ஏன் அவர் இப்படி உங்களிடம் கோபித்துக்கொண்டு போகிறார்" என்று அறை மூலையில் தலை குப்புறச் சுருண்டு விழுந்து விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த மோகினியைக் கேட்டாள் பாரதி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/623&oldid=595888" இலிருந்து மீள்விக்கப்பட்டது