பக்கம்:பொன் விலங்கு.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 பொன் விலங்கு

"சிறிது நேரத்துக்கு முன்புதானே நீ என்னைப் பாக்கியசாலி என்று சொல்லியிருந்தாய் பாரதி என்னுடைய பாக்கியம் இப்போது எப்படி முடிவாகியிருக்கிறது. பார்த்தாயா?" என்று அழுகைக் கிடையே பதில் கூறிய மோகினி, தான் ஜமீன்தாருக்குக் காப்பி கொடுத்து உபசரிக்கும்போது அவர் எதிர்பாராவிதமாக உள்ளே நுழைந்ததையும், நடுக்கூடத்தில் இன்றைக்கென்று பார்த்து எப்படியோ, எங்கிருந்தோ முளைத்து வந்து சேர்ந்திருக்கும் அந்தப் படத்தைப் பார்த்ததையும் விவரித்தாள். -

இதைக் கேட்டு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்ட பாரதி, 'சந்தேகமும் பொறாமையும் தாக்காத மனித இதயமே இருக்க முடியாதுபோல் தோன்றுகிறது அக்கா ஒருவேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்கள் தேவர்களாயிருப்பார்களோ என்னவோ? அப்படியும் கூடச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் நம்முடைய இதிகாசங்களில் தேவர்கள் கூடச் சந்தேகமும் பொறாமையும் பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்' என்று துக்கத்தோடு பதில் கூறினாள். அந்த நிலையில் மோகினியைப் பார்க்கவே சகிக்காமல் பாரதிக்குப் பரிதாபமாக இருந்தது. சந்தர்ப்பங்கள் சதிசெய்து அவளுடைய ஒரே நம்பிக்கையைப் பாழாக்கி விட்டதோடு அவளைத் துரதிர்ஷ்டசாலியாகவும் நிரூபித்து விட்டதை எண்ணி பாரதி மனம் உருகினாள். இந்த பாழாய்போன ஜமீன்தாருக்கு இன்றைக்கென்று பார்த்தா இவள் கையால் காப்பி குடிக்க வேண்டுமென்று ஆசை வரணும்?' என்பதாக ஜமீன்தார்மேல் திரும்பியது பாரதியின் கோபம். கோபத்தோடு கோபமாக மோகினியிடம் அப்போது ஒரு கேள்வி கேட்டாள் பாரதி.

'அக்கா! உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன், இப்படிக் கேட்பதினால் என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போதாவது கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து புன்முறுவல் பூத்த முகத்தோடு தனியாக நின்றோ வேறு யாரோடும் சேர்ந்தோ புகைப்படம் ஏதாவது எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?" -

இதைக் கேட்டுச் சிறிது நேரம் தயங்கிவிட்டு மோகினி பதில் கூறினாள். , - . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/624&oldid=595889" இலிருந்து மீள்விக்கப்பட்டது