பக்கம்:பொன் விலங்கு.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 623

"எத்தனையோ படம் எடுக்கிறார்கள். முதல் முதலாக நாட்டியம் அரங்கேற்றம் ஆன தினத்திலே எங்க நட்டுவாங்கம் வாத்தியாரு அவருக்கே ஆசை தாங்காமே ஒரு பெரிய தும்பிச்சங்கை ரோஜாப்பூ மாலையை வாங்கி எங்கம்மா கையிலே கொடுத்து எனக்குப் போடச் சொன்னாரு. அப்போது நான் சபைக்குக் கூசினாற்போல மேடையிலே கழுத்திலே மாலையோடு சிரித்துக்கொண்டு நின்றேன்.அதைப் படம் பிடிச்சாங்க. அதிலே ஒரு பிரதி மஞ்சள்பட்டி அரண்மனையிலே கூட உண்டு."

'ரொம்ப சரி! அந்தப் படத்தையும் அதற்குப் பக்கத்தில் ஜமீன்தார் படத்தையும் வைத்துத் தந்திரமாக இணைத்து ஒன்றாக்கி வர்ணம் தீட்டிப் பெரிதாக்க முடியும் பணத்தை வாரி இறைத்தால் இதைச் செய்து கொடுக்க ஆயிரம் போட்டோகிராபர்கள் ஓடி வருவார்கள் அக்கா ஜமீன்தாரைக் குஷிப்படுத்துவதற்காகக் கண்ணாயிரம் இந்த அற்பத்தனமான காரியத்தைச் செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று கூறிவிட்டு டிரைவர் முத்தையாவை உடனே வரவழைத்து, கண்ணாயிரம் கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏதாவது போட்டோ ஸ்டுடியோவுக்கோ கண்ணாடி பிரேம் போடும் இடத்துக்கோ காரில் போனாரா? என்பதைப் பற்றி விசாரித்தபோது அவன் உடனே விவரமாக எல்லாவற்றையும் அவளுக்குக் கூறினான். -

நான்கு நாட்களுக்குமுன் இரண்டு பெரிய படங்களை எடுத்துக்கொண்டு மல்லிகைப் பந்தல் பஜாரிலுள்ள ஒரு சிறந்த புகைப்பட நிறுவனத்துக்கு கண்ணாயிரம் காரில் போனதாகவும், முந்திய தினம் மாலையில்தான் அந்தப் படங்களில் உள்ள தனித்தனி உருவங்களை இணைத்து ஒன்றாகச் செய்தது போலாக்கிப் பெரிய படமாகப் பிரேம் போட்டுத் திரும்பி வாங்கி வந்ததாகவும், சிறிது நேரத்துக்கு முன்பே தன்னிடம் அதை ஜமீன்தார் அறையிலிருந்து அங்கே உள் கூடத்தில் எடுத்துவந்து மாட்டச் சொன்னதாகவும் டிரைவர் முத்தையா கூறியபோதுதான் பாரதிக்கு தன்னுடைய அநுமானம் முற்றிலும் சரியென்று புரிந்தது. கண்ணாயிரத்தின் அந்த அற்பத்தனமான சந்தோஷம் பேதையான மோகினியின் துரதிர்ஷ்டமாக முடிந்து விட்டதை எண்ணி அவள் மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/625&oldid=595890" இலிருந்து மீள்விக்கப்பட்டது