பக்கம்:பொன் விலங்கு.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 627

ஜமீன்தாரிடம் சிரித்துப் பேசி உபசாரம் செய்துகொண்டு நின்ற நிலையில் அவளைச்சந்தித்ததாலும் மனம் வெறுத்து வேதனையோடு அங்கிருந்து வெளியேறியிருந்தான் சத்தியமூர்த்தி.

எவ்வளவோ மனப்பக்குவமும் நிதானமும் உள்ளவனாயிருந்தும், அந்த நிலையை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. -

'இந்த மாதிரிப் பெண்களை இருமனப் பெண்டிர் என்று திருவள்ளுவர் எத்தனை பொருத்தமாக இழித்துக் கூறியிருக்கிறார். 'சூதாட்டத்தையும், குடியையும் போல் மன ஒருமை இல்லா பெண்ணின் அன்பும் ஒருவனைச் சீரழித்துவிடும் என்று அவர் கூறியிருப்பது எவ்வளவு பெரிய உண்மை. ஒழுக்கமும், நேர்மையும் இல்லாத சதைப்பிண்டமான அந்த ஜமீன்தாரின் பக்கத்தில் கழுத்து நிறைய மாலையோடும் இதழ்கள் நிறையப் புன்சிரிப்போடும் நிற்கிறாளே இந்தக் கேடு கெட்டவள். அதுதான் வெறும் படம் என்றால் என் கண்களாலேயே அந்த வீட்டு வராந்தாவில் கால் நீட்டிச்சாய்ந்திருந்த ஜமீன்தாருக்கு இவள் காப்பி டிபன் கொடுத்து உபசாரம் எல்லாம் செய்து பயபக்தியோடு அருகே நிற்கிற கோலத்தை நான் சற்று முன்பு கண்டேனே? நான் கண்ணால் கண்டது எப்படிப் பொய்யாகும்? நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும்; அல்லது நீங்கள் வாழ்ந்து என்னை நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும் என்று என்னிடம் இந்தக் கூத்தாடுகிறவள் நாடகமாடியதெல்லாம் எத்தனை பெரிய நடிப்பு? என்று தனக்குள் அவளைக் கடுமையாக நினைக்கும் நினைப்பு களுடனே நடையை வேகமாக்கிக் தன் அறைக்கு விரைந்து கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. -

அறையில் குமரப்பன் அவனை எதிர்பார்த்துப் பரபரப்போடும் மதுரையிலிருந்து வந்திருந்த அவசரமான தந்தியோடும் காத்திருந்தான். -

"என்னடா, சத்தியம் கல்லூரி விட்டதும் உடனே அறைக்குத் திரும்பிவரக் கூடாதோ? நம் கலெக்டர் மதுரையிலிருந்து உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/629&oldid=595894" இலிருந்து மீள்விக்கப்பட்டது