பக்கம்:பொன் விலங்கு.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 பொன் விலங்கு -

புறப்பட்டு வரச் சொல்லித் தந்தி கொடுத்திருக்கிறார். இப்போது கிளம்பினால் பஸ் நிலையத்திலிருந்து இன்னும் பத்துப் பதினைந்து நிமிஷத்தில் புறப்படவிருக்கும் அஞ்சரை மணி பஸ்ஸில் மதுரை போகச் சரியாயிருக்கும். உடனே புறப்படு. சொல்கிறேன். நானும் உன்னோடு மதுரைவரை வந்து விட்டுத்திரும்பநினைத்திருக்கிறேன்" என்று குமரப்பன்அவசரப்படுத்தியும் மறுபேச்சுப்பேசாமல்கல்லூரிக்கு ஒரு வாரம் லீவு எழுதிக் கொடுத்து அதை மறுநாள் காலை கல்லூரி முதல்வரிடம் சேர்க்குமாறு ரொட்டிக்கடை ஆளிடம் கூறிவிட்டு நண்பனோடு மதுரைக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. இந்தப் பிரயாணம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிறதென்று சத்தியமூர்த்திக்குத் தெரியும். யாரோஒருத்தியினுடைய அன்புதடையாக இருந்து அவனைக்கடந்த ஒருவாரமாக இதற்குத் தயங்கச் செய்து கொண்டிருந்தது. இன்று இந்த விநாடியிலோ உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் இரண்டு மனங்களென்ன, ஈராயிரம் மனங்கள் கூட இருக்க முடியும்; பிடிவாதமாகக் காதலித்து அதற்காக உயிர்விடுகிற ஒருமனப் பெண்களை வாழ்வில் சந்திக்கவே முடியாது போலும் ஒருவேளை நல்ல கவிகள் எழுதுகிற மகா காவியங்களில் வேண்டுமானால் அப்படி ஓரிரு பெண்கள் கற்பனையாக வரலாம் என்று நினைக்கும் வறண்ட மனத்தோடும் வெறுப்போடும் அவன் இருந்தான். எனவே குமரப்பனுடைய வேண்டுகோளையும், கலெக்டருடைய தந்தியையும், அதன் விளைவுகளையும் சிறிதும் தயங்காமல் எதிர்பார்த்து, ஏற்றுக்கொள்ளவும் கருதி அவன் உடனே நண்பனோடு மதுரைக்குப் புறப்பட்டு விட்டான். கல்லூரி வேலைநிறுத்தம் பற்றிய விசாரணைக்காக வந்திருந்த கலெக்டர் திரும்பும்போது, "சத்தியம் உனக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் மனப்பூர்வமாக உனக்கு நான் கூறுகிற இந்த அறிவுரையை நீ ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உன் விருப்பத்தைப் ப்ொறுத்தது. இவ்வளவு நல்ல படிப்பையும், தோற்றத்தையும் வைத்துக்கொண்டு உன்னைப் புரிந்துகொள்ளாத இவர்களுக்கிடையே நீ சாதாரண விரிவுரை யாளனாக இருந்து என்ன பயன்? - - -

'உனக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையே எவ்வளவு பிரச்சினை-வேறுபாடுகள் எல்லாம் உண்டாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/630&oldid=595896" இலிருந்து மீள்விக்கப்பட்டது