பக்கம்:பொன் விலங்கு.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 629

அவற்றிலிருந்து நீ தப்பி வென்று விட்டாலும் இனியும் உன்மேல் வைரம் வைத்துக்கொண்டு பழிவாங்க அவர்கள் நேரம் பார்த்திருப்பார்கள். தனியார் நிர்வாகத்திலுள்ள எல்லாக் கல்லூரிகளிலும் இப்படிப்பட்டபாரபட்சங்கள்.நிறைய உண்டு. பூபதி உயிரோடிருந்திருந்தால் நடப்பது வேறு. அவரும் போய்ச் சேர்ந்துவிட்டார். ஹென்றி வான் டைக் டு தி அன்னோன் டிச்சர் என்ற பெயரில் ஒரு கவிதை பாடியிருக்கிறான். தெரியுமா? அதுதான் இப்போது எனக்கு நினைவு வருகிறது.

"ஆசிரியனே? நீ எல்லாருடைய இதயத்திலும் இருளகற்றி ஒளி பரப்பி அவர்களை புகழுக்குரியவர்களாக்குகிறாய்; ஆனால் உன் புகழும் பெருமையும் எல்லாருக்கும் மொத்தமாக மறந்து போய் விடுகின்றன. நீ இருளில் கிடந்து வாடுகிறாய்? என்று அந்தக் கவிதையில் அவன் கூறுகிறான். உன்னுடைய வாழ்வும் படிப்பும் அப்படி இருளடைவதாய் ஆகிவிடக் கூடாது. நான் சொல்வதைக் கேள். சமீபத்தில் ஆங்கிலச் செய்தித்தாளில் நான் ஒரு விளம்பரம் பார்த்தேன். மேற்கு ஜெர்மனியிலுள்ள ஹிடல்பர்க், மார்பர்க் ஆகிய பல்கலைக் கழகங்களில் பழமையான கீழ்த்திசை மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சித் துறைக்காகத் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்களைக் கேட்டு இந்தியாவிலுள்ள ஜெர்மன் தூதராலயத்தின் சார்பில் அரசினரின் விளம்பரம் வந்திருந்தது. பயிற்சிக்காலத்தில் மாதம் 1500 மார்க்ஸ்" ஜெர்மன் நாணயம் (சுமார் ரூ.1875) உதவித் தொகையாகத் தருகிறார்கள். இரண்டு மூன்று வருடங்கள் நான் கூறிய ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் இருந்துவிட்டு மொழியியல் துறையில் டாக்டர் பட்டத்தோடு நீ இந்தியாவுக்குத் திரும்பி வா. இந்த வேலைக்குத் தகுதியும் தோற்றப்பொலிவும் உள்ள நீ அவசியம் தேர்வு பெறுவாய். . . . - 'ஊருக்குப் போனதும் விண்ணப்பத்தாளும் விவரங்களும் உனக்கு அனுப்பி வைக்கிறேன். உடனே பூர்த்தி செய்து உன்முகவரி கொடுக்கும்போது மட்டும் கவனமாக உன் பெயரை எழுதி மேற்பார்வை என்று போட்டுக் கீழே என்னுடைய மதுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/631&oldid=595897" இலிருந்து மீள்விக்கப்பட்டது