பக்கம்:பொன் விலங்கு.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 米 மனத்தின் எல்லா நோய்களுக்கும் அன்புதான் மருந்து. அதே அன்பு பொய்யாயிருந்து விட்டாலோ அதைவிடப் பெரிய நோய் வேறெதுவும் இல்லை. .

தந்தியைப் பற்றிக் கூறியதும் உடனே கல்லூரிக்கு லீவு எழுதிக் கொடுத்து விட்டு மறுக்காமல் மதுரைக்குப் புறப்பட்டிருந்தாலும் பிரயாணத்தின்போது சத்தியமூர்த்தி சிறிதும் உற்சாகமின்றி ஏதோ ஆழ்ந்த மனப்போராட்டங்களாலே தாக்கப்பட்டவனைப்போல் தளர்ந்து உடன் வருவதைக் குமரப்பன் உணர்ந்து கொண்டான். எனவே நண்பனோடு அதிகம் பேச்சுக் கொடுக்காமலும் அவனுடைய மனப் போராட்டத்துக்குக் காரணத்தை அவனிடமே தூண்டித் தூண்டிக் கேட்காமலும் பஸ்ஸுக்கு வெளியே ஒடும் காட்சிகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தலானான் குமரப்பன்.

சரியாக அதே நேரத்திலே லேக் அவென்யூவில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடி மோகினியின் கடிதத்தோடு வந்த மகேசுவரி தங்கரத்தினத்துக்கு "அவரு ஊருக்குப் போயிருக்காரு ஏதோ அவசரமாகத் தந்தி வந்தது. ஒரு வாரம் காலேஜுக்கு லீவு போட்டு விட்டுக் கிளம்பிட்டாரு" என்று கீழேயிருந்த ரொட்டிக் கடை வேலைக்காரன் பதில் கூறினான். ஏமாற்றத்தோடு திரும்பிய மகேசுவரி திருப்பிக் கொடுத்து, அவர் ஊரில் இல்லை என்ற விவரத்தையும் தெரிவித்தாள். சத்தியமூர்த்தி ஊரில் இல்லை என்ற விவரத்தைப் பாரதியிடமிருந்து கேள்விப்பட்டபோது, "நீ ஏன் வீண்ாக மனம் கலங்குகிறாய் பெண்ணே என் பாக்கியம் அவ்வளவுதான். இந்த உலகத்தில் என்னைப் போல் துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் கிடையாது" என்று அrமகைக்கி ைம்ே 1ாாகியைப் பார்க்கக் கூளினாள் மோகினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/633&oldid=595899" இலிருந்து மீள்விக்கப்பட்டது