பக்கம்:பொன் விலங்கு.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 பொன் விலங்கு

'கவலைப்படாமல் இருங்கள் அக்கா சந்தேகங்களும் தடைகளும் குறுக்கிடாத காதல் தேவர்களின் இதிகாசங்களில் கூட இல்லை. உங்களுடைய புண்ணியம் வீண் போகாது. சத்தியமூர்த்தி சார் எவ்வளவோ நல்லவர். முன்கோபமும், பொறாமையும் அவரிடம் என்றுமே இருந்ததில்லை. இன்று ஏதோ சந்தர்ப்பக் கோளாறுகளால் இப்படி ஆகிவிட்டது. நீங்கள் ஜமீன்தாருக்குக் காப்பிகொடுத்துக் கொண்டிருந்ததையும் உங்களை அவரிடமிருந்து பிரிக்க வேண்டுமென்றே இந்தப் பாவிகள் தந்திரமாகத் தயார் செய்து மாட்டிய படத்தையும் பார்த்துத் திடசித்தமுள்ளவராகிய சத்தியமூர்த்தியே மனம் வேறு பட்டு ஆத்திரம் கொண்டுவிட்டார். எல்லாம் விஷக்கடி வேளை என்று வருந்திய பாரதி மோகினியைச் சமாதானப் படுத்தி அமைதியடையச் செய்ய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

"நீங்கள் நிம்மதியாக இருக்கனும் அக்கா சத்திய மூர்த்தி சார் மதுரைக்குத்தான் போயிருக்கிறார் என்று தெரிகிறது. உங்களுடைய இந்தக் கடிதத்தைப் படித்தால் எப்படியும் அவருடைய மனம் இளகும். அவருடைய மதுரை வீட்டு விலாசம் எனக்குத் தெரியும். உங்கள் கடிதத்தை நாளைப் பகலில் மதுரைக்குத் தபாலில் அனுப்பி வைக்கிறேன். கடிதம் அவருக்குக் கிடைத்து அதை அவர் படித்த பின்பு மறுபடி இங்கு திரும்ப வரும்போது உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதற்காக மனம் வருந்தியபடி வருவார். எல்லாம் சரியாகி நல்லபடி முடியும். வீணாக மனம் கலங்காதீர்கள்' என்று மோகினிக்கு ஆறுதல் கூறி விட்டு அவள் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தை மறுநாள் பகலில் அவருடைய மதுரை முகவரி எழுதிய உறையிலிட்டு ஒட்டி ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்திடம் கொடுத்தனுப்பினாள். டிரைவர் முத்தையாவிடம் கொடுத்தனுப்பலாமென்றால் அவன், கண்ணாயிரத்தையும் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் அழைத்துக் கொண்டு காரில் நேரே மஞ்சள்பட்டி போய் அங்கு ஏதோ காரியங்களை முடித்துக்கொண்டு அப்புறம் மதுரை போய் விட்டுத் திரும்புவதற்காக மறுநாள் காலையில் புறப்படுவதாகச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/634&oldid=595900" இலிருந்து மீள்விக்கப்பட்டது