பக்கம்:பொன் விலங்கு.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 633

யிருந்தான். சத்தியமூர்த்தியின் தந்தையாகிய அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரிடமே உறையிலிட்டு ஒட்டிய இந்தக் கடிதத்தைக் கொடுத்து மதுரையில் அவருடைய மகனிடம் சேர்க்கச் சொன்னால் என்ன? ஒரு கணம் பாரதிக்கு யோசனை தோன்றியது. அடுத்த கணமே அந்த யோசனை பைத்தியக்காரத்தனமாகவும், நம்பிக்கையற்றதாகவும் படவே, அவள் அதைச் செய்வதில்லை என்ற முடிவுடன் தன் தோழி மகேசுவரி மூலம் தபாலுக்குக் கொடுத்தனுப்பினாள். கணக்குப்பிள்ளைக் கிழவர் தம் மகனை என்ன காரணத்தினாலோ வெறுக்கிறார். தவிரவும் அவர் நேரே மதுரைக்குப் போகாமல் காரில் முதலில் மஞ்சள்பட்டி போய் அங்கு ஒரு நாளோ இரு நாட்களோ தங்கிக் காரியங்களைப் பார்த்துவிட்டு அப்புறம் கண்ணாயிரத்தோடு அங்கிருந்து புறப்பட்டு மதுரைப் போகப் போகிறார். கண்ணாயிரமும் உடன்போகிறபோது கணக்குப் பிள்ளைக் கிழவரை நம்பி இதைக் கொடுத்தனுப்புவது பைத்தியக்காரத்தனம் பணத்துக்காகச் சேரத் தகாதவர்களோடு சேர்ந்து சொந்த மகனையே வெறுக்கிறவரை எப்படி நம்புவது? என்று சிந்தித்த பின்பு கடிதத்தைச் சத்தியமூர்த்தியின் பேருக்கே பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள் பாரதி. - பஸ்ஸில் பிரய்ாணம் செய்யும்போதும் அதன் பின்பு

மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்தில் இறங்கி மாறி புகைவண்டியில் பிரயாணம் செய்யும்போதும் சத்தியமூர்த்தி பிரயாணம் செய்வதுகூட ஞாபகமில்லாது ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்."பிறர் மனமிரங்கிக் கண்கலங்குமாறு செய்யும் ஆற்றல் எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது.மோகினியைப் போல அழகும், கவர்ச்சியும், திறனும் உள்ள பெண்களுக்கு இந்த ஆற்றல் சிறிது அதிகமாகவே இருக்கலாம். இவ்வளவு நாள் இவளை ஒரு பொருளாக மதித்து மனத்தில் இடமளித்து கவலைப்பட்டு நான் உருகுமாறு செய்த ஆற்றல் என்னை இதுவரை ஏமாற்றி யிருக்கிறதென்றே சொல்லலாம். இவள் என்மேல் உயிரையே. வைத்து வாழ்கிறாள் என்று நான் எண்ணியிருந்தது எத்தனை பெரிய பேதமை? ஜமீன்தாருக்கும் இவளுக்கும் திருமணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/635&oldid=595901" இலிருந்து மீள்விக்கப்பட்டது