பக்கம்:பொன் விலங்கு.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 635

அந்த முயற்சிக்கு வேறு பயன் விளையவில்லை. சனியன் கழற்றி எறியவும் வரவில்லை என்று வெறுப்போடு முணுமுணுத்தவாறே குளியலறையிலிருந்து திரும்பி மறுபடியும் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான் அவன். இந்த உலகத்தில் ஒரே நோய்தான் உண்டு! ஒரே மருந்துதான் உண்டு. அன்பு இன்மைதான் பெரிய நோய். அன்புதான் மருந்து. துன்பம், சோர்வு, பயம் எல்லாம் அன்பில் அழிந்துவிடும். அதே அன்பு உண்மையாயில்லாமல் பொய்யாகவோ, வஞ்சகமாகவோ இருந்து விட்டால் அது தான் மிகப் பெரிய நோய் அந்த நோய் அதற்கு ஆளானவனுடைய மனத்தையே பாலைவனமாக்கி விடும். 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று ஒளவையார் பாடியிருப்பது எத்தனை பொருத்தமாகி விட்டது? பிடிவாதமாக அன்பு செய்யவோ சிறப்பாக ஒருவனிடம் மட்டும் மனத்தைக் கொடுத்துக் காதல் புரியவோ இவர்களுக்குத் தனிமனம் கிடையாது என்பதனால் அல்லவோ கம்பர் இவர்களையெல்லாம், நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனப் பெண்டிர் என்று பாடி வைத்தார்? - என்பதாக எண்ணங்கள் எல்லாம் மோகினியின் மேல் விளைந்திருக்கும் வரம்பிலா வெறுப்புக் காரணமாகவே அவன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. பல நாட்களுக்குமுன் முதன் முதலாக மதுரை வைகைப் பாலத்தருகே இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கிருந்த நிலையில் வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்ச் சரீரமெங்கும் பாதாதிகேசபரியந்தம் சந்தனமும், மருக்கொழுந்தும் மலர்ந்தாற்போல் மணக்க, தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்று அமைந்தாற் போன்ற பற்களோடு மோகினி தனக்கு அறிமுகமான சம்பவமும், அதற்குப்பின்பு அவளோடு பழக் நேர்ந்த சம்பவங்களும் ஒவ்வொன்றாக நினைவுவந்து இந்த விநாடியில் அவனது மன எல்லையெல்லாம் நிறைந்திருந்த வெறுப்பையும், விரோதத்தையும்-மேலும் வளர்த்தன. அவளைச் சுற்றியிருக்கும் எல்லா நரகங்களுக் கிடையேயும் அவளே மிகப் பெரிய நரகமாகி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/637&oldid=595903" இலிருந்து மீள்விக்கப்பட்டது