பக்கம்:பொன் விலங்கு.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 637

இருந்துதான் வஸந்தசேனை, மாதவி, மணிமேகலை - கடைசியாக மோகினி எல்லாரும் தோன்றியிருக்கிறார்கள் என்றுதானே ஒருநாள் மோகினியிடம் அவளைப் புகழ்ந்து கூறியதை நினைத்து அதற்காக இப்போது வருந்தி வெட்கமுற்றது அவன் மனம், ... . . .

மதுரை இரயில் நிலையத்தில் போய் இறங்கிய போதும் கூட மனம் குழம்பிய நிலையில்தான் இருந்தான் அவன். 'ஏன் இப்படி இருக்கிறாய்? தலைவலியா? உடல் நலமில்லையா?' என்று குமரப்பன் விசாரித்தபோதுகூடசத்தியமூர்த்தி ஏதோ பதில் சொல்லி மழுப்பி விட்டான். இரயில் நிலையத்துக்குக் கலெக்டருடைய மூத்த மகன் வந்திருந்தார். அப்போது இரவு ஒன்பதேகால் மணி ஆகியிருந்தது. அந்த இரயிலிலேயே அவர்கள் இருவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்து அப்பாவிட்டில் காத்திருப்பதாகவும் இருவரையும் நேரேதங்கள் வீட்டுக்கே அழைத்து வருமாறு தன்னை இரயில் நிலையத்துக்கு அவரே அனுப்பியதாகவும் கலெக்டருடைய புதல்வர் கூறினார். - " " .. " . . . . . . - . . .

சத்தியமூர்த்தியும், குமரப்பனும் கலெக்டரின் மகனோடு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள் இரயிலிலிருந்து, வந்தபின் எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருந்த கலெக்டர் சத்தியமூர்த்தியும், குமரப்பனும் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அங்கேயே அவர்களையும் சாப்பிடச் செய்துவிட்டார். டெல்லியிலிருந்து இன்டர்வ்யூவுக்குத் தேதி குறிப்பிட்டு வந்திருப்பதாகச் சத்தியமூர்த்தியிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர். "இண்டர்வ்யூவில் வெற்றி கிடைத்து நீதேர்வு பெறுவதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை! அதற்கான ஏற்பாடுகளைக்கூட நான் செய்துவிட்டேன். சத்தியம், நீ நாளை மாலை இங்கிருந்து சென்னை புறப்பட்டு நாளன்றைக்குக் காலையில் சென்னையிலிருந்து கிராண்ட்டிரங் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லிக்குச் செல்ல வேண்டும். டெல்லியில் எல்லாம் சரியாக முடிந்துவிட்டால் அடுத்தமாத மத்தியில் பம்பாயிலிருந்து புறப்படும் லுப்தான்ஸா என்ற ஜெர்மானிய ஜெட் விமானத்தில் உன் பிரயாணம் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/639&oldid=595905" இலிருந்து மீள்விக்கப்பட்டது