பக்கம்:பொன் விலங்கு.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 639

'என்னமோ போ! நீ இப்படியே வீட்டோட வாசலோட ஒட்டுதல் இல்லாத பிள்ளையாகப் போய்க்கிட்டிருந்தா விடிஞ்சாப் போலத்தான். ஏதுடா, பெரியவங்களையோ தன் மனிசாளின்னு ரெண்டு பேரையோ கலந்து பேசிக்காம இதெல்லாம் ஏற்பாடு செய்யறோமேன்னு நீ கொஞ்சமாவது கவலைப்படறியோ? தேசம் விட்டுத் தேசம் போயி ரெண்டு மூணு வருசம் இருக்கப்போறே! அதைப்பற்றிப் பெத்த தகப்பனிட்ட ஒரு வார்த்தை கேட்கலை. நீ செய்யறது உனக்கே நல்லாயிருந்தா சரி' என்று அலுத்துக்கொண்டாள் அவன் அம்மா.

"உன்னைப் பார்க்காமல் சொல்லாமல் போக மனசு இல்லே அம்மா! தங்கைகள் ஆண்டாள், கல்யாணி இவர்கள் மேலே வைச்சிருக்கிற பிரியமும் ஒரு காரணம். இன்று இங்கே அப்பா இருந்திருந்தால் என்னை வீட்டு வாசற்படிஏற விட்டிருக்கமாட்டார். என்னை விட இப்போது ஜமீன்தாரும், குடி கெடுக்கிற கண்ணாயிரமும்தான் ரொம்ப வேண்டியவர்களாகி விட்டார்கள் அவருக்கு. தன் மனிசாள் என்று நீ சொல்கிறாய் தன் மனிசாள் என்ன நல்லது செய்யறாங்க? இதோ இந்தக் கலெக்டர் எப்பவோ எனக்கு வாத்தியாராயிருந்தாரு. நான் கேட்டுச் செய்யாமல் அவராகவே இவ்வளவும் எனக்குச் செய்கிறார். இந்த மாதிரிப் பெருந்தன்மையைத் தன் மனிசாளிடத்திலேகூட எதிர்பார்க்க முடியறதில்லை' என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லியபோது குமரப்பனும் அதை ஆமோதிப்பதுபோல் அந்த அம்மாளிடம் இரண்டு நிமிஷம் ஏதோ தன்மையாகப் பேசிக் கொண்டிருந்தான்.

'படுத்துக் கொள்ளுங்கள் காலையில் பேசிக் கொள்ளலாமே" என்று இரண்டு பேருக்கும் படுக்கை தலையணைகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள் அம்மா. படுக்கையை விரித்துப் படுத்தவுடனே குமரப்பன் நன்றாகத் தூங்கிப்போய் விட்டான். சத்தியமூர்த்திக்குத்துக்கம் வரவில்லை. மோகினி தனக்குத் துரோகம் செய்துவிட்டு ஜமீன்தாரை இரகசியமாக மணந்து கொண்டு அவருக்கு உபசாரம் செய்கிறாள் என்பதை நம்பவும் முடியாமல் மறந்து விடவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அவன் மனம். அவளோடு தொடர்புடைய எண்ணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவனுடைய நிம்மதியையும் தூக்கத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/641&oldid=595908" இலிருந்து மீள்விக்கப்பட்டது