பக்கம்:பொன் விலங்கு.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 641

'கழற்றாதீர்கள் மாலையை எங்கே சூட்ட வேண்டுமென்று நினைத்தேனோ அங்கேயே அது விழுந்துவிட்டது என்பது போல் ஏதோ கூறிச் சிரித்ததையும் அவளுடைய வீட்டுக் கண்ணாடியில் தானும் அவளும் சேர்ந்து தெரிந்த கோலத்தை மணக்கோலமாக வருணித்து அவளே நாணியதையும் என்னுடைய அன்பு மழையைப்போல் எப்போதாவது பெய்து மறைவதில்லை, கதிரவனைப்போல் நித்தியமாக உதிப்பது என்று அவளே உறுதி கூறியதையும் உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதைவிட எனக்கு வேறு பாக்கியமேது என்று அவள் மனம் நெகிழ்ந்து கூறியதையும், அவளுடைய படங்களோடு குமரப்பன் தனக்குக் கடிதம் எழுதியிருந்ததையும், அவள் தனக்கு எழுதியிருந்த கடிதமொன்றைத் தன் பெட்டியிலிருந்து குமரப்பன் தெரியாமல் எடுத்துப் படித்துவிட்டுத் தன்னைப் பாக்கியசாலியாக வருணித்ததையும், கார் விபத்தில் தாய் இறந்து அவள் ஆஸ்பத்திரியில் கிடந்தபோது நண்பனோடு மதுரைக்குப் போய் பார்த்த வேளையில், 'நான் மானசீகமாக உங்களுக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டேன், சாகும்போது உங்கள் மனைவியாகவே சாவேன்' என்று அவள் தன்னிடம் அழுது கண்ணிர் சிந்தியதையும், வசந்தசேனை-சாருதத்தன் கதையைத் தான் அவளுக்குக் கூறியதையும், பொன்னுசாமிப் பிள்ளைத் தெருப் பாட்டு வாத்தியாரிடம் அவளைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு தான் பெருமைப்பட்டதையும், கோச்சடை ஜமீன் மாளிகையில் அடைபுட்டுக் கிடந்தபோது அவள் தன்னிடம் அழுது வேண்டிய வேண்டுகோளையும், ! 'உங்களோடு வாழ்ந்ததாகப் பாவித்தபடியே இறப்பதுகூட என் செளபாக்கியம்' என்று அப்போது அவள் கூறிக் கதறியதையும், அலங்கரித்த தேர்போல் அவள் தன் எதிரே நடந்த நடைகளையும், சிரித்த சிரிப்புகளையும், அழுத அழுகைகளையும் எல்லாவற்றையும் நினைத்து'அப்படிப்பட்டவள் இன்று ஒழுக்கக்கேடும் குணக்கேடும் உள்ள இந்த ஜமீன்தாரை மணந்து அவருக்கு ஒடியாடி உபசாரம் செய்யத் துணிந்தது எப்படி? என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று நினைத்து நினைத்து அந்த நினைப்புக்கு ஒரு முடிவும் தெளிவும் கிடைக்காமல் சத்தியமூர்த்தி மனம் கொதித்தான். -

பொ.வி-41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/643&oldid=595910" இலிருந்து மீள்விக்கப்பட்டது