பக்கம்:பொன் விலங்கு.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 பொன் விலங்கு

பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று கற்புள்ள பெண்களைப் புகழ்ந்த அதே வள்ளுவர், இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறுபடும்' என்றும் வேறோரிடத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார். வேறுபடுவதில் பெண் மனம் அவ்வளவு பலமற்றதா? செய்த சத்தியங்களையும் சொல்லிய காதல் மொழிகளையும் அறவே மறந்துபோய் இந்த ஜமீன்தார் காலடியில் விழுந்து பணிவிடை புரிய இவள் எப்படித் தன்னைத் தயாராக்கிக் கொண்டாள்? இவள் எக்கேடு கெட்டால் என்ன? நான் ஏன் இவளுக்காக இவ்வளவு தவிக்க வேண்டும்? இவ்வளவு நினைக்கவேண்டும்? என் மனம் இந்தத் தவிப்பையும் கொதிப்பையும் இன்னும் ஏன் விடமாட்டேனென்கிறது? என்று தன்னையே கடிந்துகொண்டு வலிந்து தூங்க முயன்றான் அவன். விடிகாலை மூன்று மணிக்குமேல் அயர்ச்சி தாங்காமல் தூக்கம் மெல்ல வந்தது. அதிலும் ஒரு சொப்பனம். சந்தேகம் உங்கள் கண்களை மறைக்கிறது! நான் துர்பாக்கியசாலி. என்னைக் கெட்டவளாக நினைக்காதீர்கள் என்று மோகினி தன்னிடம் வந்து கதறுவது போல் கனவு கண்டான் அவன். - -

காலையில் விடிந்ததும் பத்து பத்தரை மணிக்கு மறுபடியும் கலெக்டரைப் பார்க்கப் போனார்கள் அவர்கள். பாஸ்போர்ட், ரிஸர்வ் பேங்க் விண்ணப்பம் பற்றி அவர் சில யோசனைகளைக் கூறினார். சென்னையிலும் டில்லியிலும் சிலரைப் பார்க்குமாறு சத்தியமூர்த்திக்கு அறிமுகக் கடிதங்கள் கொடுத்தார்.அவருடைய வீட்டிலிருந்து நேரே மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனார்கள் நண்பர்கள். அம்மன் கோவிலில் திருச்சுற்றை வலம் வரும்போது அந்தப் பழிகாரியின் நினைவு வந்து சத்தியமூர்த்தியின் மனத்தைக் கலக்கியது. அன்று மாலை ஆறரை மணியளவில் அவன் சென்னைக்கு இரயிலேற வேண்டும். அதே இரயிலில் குமரப்பனும் அவனோடு கூடவந்து மல்லிகைப்பந்தல் ரோடு நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்ஸில் போய் விடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். "டெல்லியில் இன்டர்வ்யூ முடிந்ததும் மதுரை வந்து என்னைப் பார்த்துவிட்டு அப்புறம் மல்லிகைப் பந்தலுக்குப் போய் உன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/644&oldid=595911" இலிருந்து மீள்விக்கப்பட்டது